Published:Updated:

`மருந்து விஷயத்தில் பின்தங்கியுள்ளோம்.. கொரோனா வைரஸ் செம ஸ்மார்ட்!’ - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப்

செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், ``கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்..” என்றார்.

சீனா, இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். தற்போது வரை அமெரிக்காவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தினமும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் அதிகமாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 25,316 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்
வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்
Alex Brandon

அதேபோன்று கடந்த வாரத்தை ஒப்பிடும்போது அமெரிக்காவில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் உச்சத்தில் இருக்கிறது. தற்போதுவரை அமெரிக்காவில் 9,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,165. ஆரம்பம் முதலே கொரோனா வைரஸை அமெரிக்கா எளிதாக எடுத்துக்கொண்டது இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அமெரிக்கா, கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை குறை சொல்வதில் காட்டிய கவனத்தை அதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் காட்டவில்லை எனப் பலரும் அந்நாட்டை விமர்சிக்கின்றனர்.

எனினும் அதிபர் ட்ரம்ப் தற்போது நோயின் தீவிரத்தை உணர்ந்தவராக தெரிகிறார். தினமும் வெள்ளை மாளிகையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார். சில நாள்கள் இந்தச் செய்தியாளர் சந்திப்பு இரண்டு மணி நேரம் வரை கூட செல்கிறது.

கொரோனா
கொரோனா

இதற்கிடையே, `அமெரிக்கா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறது. புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் புதிய மரணங்கள் அச்சம் தரக்கூடிய அளவில் உயர்ந்து வருகிறது. அடுத்து வரும் சில நாள்கள் மிகக் கடுமையான நாள்கள்’ என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரம் அதிகபட்ச பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நேற்று நியூயார்க்கில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தாலும் அதன் எண்ணிக்கை இன்னும் 7,300 ஆக இருக்கிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், `தற்போது அமெரிக்கா இருக்கும் நிலையில் நியூயார்க்கில் எண்ணிக்கை குறைந்துள்ளது நல்ல அறிகுறி' என்றார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

முன்னதாக அமெரிக்கா கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. எனினும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், ``கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்..” என்றார்.

கடந்த காலங்களில் அமெரிக்காவில் கொரோனா வைரஸே இல்லை என தெரிவித்துவந்த ட்ரம்ப் தற்போது அது மிகவும் கடினமானது எனத் தெரிவித்துள்ளார். நேற்றைய செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து தெரிந்து வருகிறோம். அது கடினமானதாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறது. ஆனால், நாம் மிகக் கடினமானவர்கள். மேலும், அதை விடவும் ஸ்மார்ட்டானவர்கள்” என்றார் நம்பிக்கையுடன். அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் ஒரு லட்சம் முதல் 2.4 லட்சம் வரை மரணங்கள் நிகழலாம் என்று அஞ்சப்படுகிறது.

`மிகக் கடுமையான 2 வாரங்கள்; 2.2 லட்சம்!' - ட்ரம்ப் எச்சரிக்கை; வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி கணிப்பு
அடுத்த கட்டுரைக்கு