Published:Updated:

வீடு புகுந்து சுத்தியலால் தாக்கப்பட்ட அமெரிக்க சபாநாயகரின் கணவர்; குற்றவாளி கைது - நடந்தது என்ன?!

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி - அவரின் கணவர் பால் பெலோசி ( ட்விட்டர் )

அமெரிக்க வெள்ளை மாளிகையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க சபாநாயகரான நான்சி பெலோசி வாஷிங்டனில் இருந்தார். அவரின் கணவர் பால் பெலோசி நேற்று வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் `நான்சி எங்கே... நான்சி எங்கே?’ எனத் தேடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி - அவரின் கணவர் பால் பெலோசி
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி - அவரின் கணவர் பால் பெலோசி

நான்சி பெலோசின் கணவர் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் கொண்டுவந்திருந்த சுத்தியலால் பால் பெலோசியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தாக்கப்பட்ட பால் பெலோசி 911-ஐ டயல் செய்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவருக்கு மண்டை ஓட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும், வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் நான்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க காவல்துறை
அமெரிக்க காவல்துறை
ட்விட்டர்

பால் பெலோசியைத் தாக்கியவரை காவல்துறை தேடிவந்த நிலையில், 42 வயதான குற்றவாளி டேவிட் டெபாப் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவர் எதற்காக சபாநாயகர் நான்சி பெலோசியைக் கொலை செய்ய வந்தார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.