Published:Updated:

உக்ரைன் - ரஷ்யா போர்: துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்கப் பத்திரிகையாளர் உயிரிழப்பு!

அமெரிக்கப் பத்திரிகையாளர் ( ட்விட்டர் )

உக்ரைனில் அமெரிக்கப் புகைப்படக் கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பிரெண்ட் ரீனாட் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்: துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்கப் பத்திரிகையாளர் உயிரிழப்பு!

உக்ரைனில் அமெரிக்கப் புகைப்படக் கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பிரெண்ட் ரீனாட் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அமெரிக்கப் பத்திரிகையாளர் ( ட்விட்டர் )

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில் பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைனில் போர் செய்யத் தொடங்கின. ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. ரஷ்யப் படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ஏவுகணை, வான், பீரங்கித் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

உக்ரைன் -ரஷ்யா போர்
உக்ரைன் -ரஷ்யா போர்
ட்விட்டர்

இந்த நிலையில் அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக, கீவ்-வின் காவல்துறைத் தலைவர் ஆண்ட்ரி நெபிடோவ் தெரிவித்திருப்பதாவது, ``உக்ரைனில் பணிபுரியும் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடமேற்கு நகருக்கு வெளியே உள்ள இர்பின் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரஷ்ய வீரர்கள் அவரைக் குறிவைத்தனர். மேலும் இரண்டு பத்திரிகையாளர்கள் காயமடைந்ததன் காரணமாக மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் நடந்த போர் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதன்முறை'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism