Published:Updated:

``ஆயுதத் தேவைக்காக இந்தியா ரஷ்யாவுடன் தொடர்பில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை" - அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் வெண்டி ஷெர்மன் ( ட்விட்டர் )

ஆயுதத் தேவைக்காக இந்தியா ரஷ்யாவுடன் தொடர்பில் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

``ஆயுதத் தேவைக்காக இந்தியா ரஷ்யாவுடன் தொடர்பில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை" - அமெரிக்கா

ஆயுதத் தேவைக்காக இந்தியா ரஷ்யாவுடன் தொடர்பில் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் வெண்டி ஷெர்மன் ( ட்விட்டர் )

உக்ரைன் - ரஷ்யா இடையே தொடரும் போரால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா வணிக தொடர்பு வைத்திருக்கக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  

இந்தியா - ரஷ்யா
இந்தியா - ரஷ்யா

இந்த நிலையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "இந்தியா போன்ற இன்னும் பிற நாடுகள் பாதுகாப்பு மற்றும் ஆயுதத் தேவைக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. மேலும், முழுமையாக ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை ஊக்கப்படுத்தாது.

அமெரிக்கா இந்தியாவுடன் வைத்திருக்கும் பாதுகாப்புக் கூட்டமைவை மதிக்கிறோம். ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் இன்னும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த பிராந்தியத்தில் இந்தியா பாதுகாப்பு வழங்குநராக உள்ளது. அதையும் மதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்கா - இந்தியா
அமெரிக்கா - இந்தியா

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் வெண்டி ஷெர்மன், "ரஷ்யாவின் ஆயுதத் தொழிலில் உலகளாவிய பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய ஆயுதங்கள் மீதான பாரம்பரிய நம்பிக்கையிலிருந்து  நகர்வதற்கு அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படும்.

ரஷ்ய ஆயுதங்களில் கட்டமைக்கப்பட்ட தங்கள் இராணுவத்துக்கு ரஷ்ய ஆயுதங்களுடன் எதிர்காலம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஏனெனில், அமெரிக்காவின் பொருளாதாரத்  தடைகள் ரஷ்யாவின் இராணுவ-தொழில்துறையைப் பாதித்துள்ளது. அதிலிருந்து ரஷ்யா மீளுவதற்கு தற்போது வாய்ப்பில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism