Published:Updated:

``அமெரிக்காவின் தடையை இந்தியா மீறும் என்று நம்பவில்லை!" - வெள்ளை மாளிகை அதிருப்தி

வெள்ளை மாளிகை ( Carolyn Kaster )

``ரஷ்யாவின் கச்சா எண்ணெயைத் தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா பரிசீலித்துவருகிறது.’’ - இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி.

``அமெரிக்காவின் தடையை இந்தியா மீறும் என்று நம்பவில்லை!" - வெள்ளை மாளிகை அதிருப்தி

``ரஷ்யாவின் கச்சா எண்ணெயைத் தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா பரிசீலித்துவருகிறது.’’ - இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி.

Published:Updated:
வெள்ளை மாளிகை ( Carolyn Kaster )

கடந்த பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்திவருவதால் உக்ரைன் மட்டுமல்லாமல், உலகின் பிற நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன. மேலும் ரஷ்யாவின் இந்தப் போர்த் தாக்குதலால் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது நேரடியாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் புதின், பிற ரஷ்ய அதிகாரிகளின் சொத்துகளையும் இந்த நாடுகள் முடக்கிவருகின்றன.

இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி
இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி

இது ஒருபுறமிருக்க, உக்ரைன் போர் விளைவாக கச்சா எண்ணெய் விலையும் பல மடங்கு உயர்ந்துவருகிறது. இதனால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் தேங்கிய வண்ணம் உள்ளது. அமெரிக்காவும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பிற பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதித்தது. இதன் காரணமாகத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை மற்ற நாடுகளுக்கு விற்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியா, ரஷ்யாவின் கச்சா எண்ணெயைத் தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பரிசீலித்துவருவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக ரஷ்ய துணைப் பிரதமர், இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகவும் கூறப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியிடம், இந்தியா குறித்து வெளியான இத்தகைய தகவல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜென் சாகி, ``ரஷ்யாவின் கச்சா எண்ணெயைத் தள்ளுபடி விலையில் இந்தியா வாங்குவதன் மூலம், அமெரிக்காவின் தடைகளை இந்தியா மீறும் என்று நம்பவில்லை. ஆனால் அத்தகைய நடவடிக்கை, உலகின் ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்தை வரலாற்றின் தவறான பக்கத்தில் வைக்கும். அதேசமயம் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள். மேலும், அமெரிக்காவின் தடைகளுக்கு நாடுகள் கட்டுப்பட வேண்டும் என்பதே பைடன் அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் இருக்கும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism