Published:Updated:

`எல்லை கோடு அருகே 60,000 சீன ராணுவ வீரர்கள்!’- அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ

மேற்கு நாடுகள் சீனாவை நிறையவே ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டது. முந்தைய அரசு அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமைகளை சீனா திருடிச் செல்ல அனுமதித்தது.

இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதை எதிர்கொள்வதற்காக இந்தியாவும் தொடர்ந்து அந்த பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டோக்கியாவில் குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு நேரடியாக சந்திக்கும் முதல் கூட்டம் இதுவாகும். மாநாட்டில் கலந்து கொண்டு அமெரிக்கா திரும்பிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

லடாக் எல்லை
லடாக் எல்லை
AP

மைக் பாம்பியோ, `நான் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த எனது சக வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தேன். நான்கு பெரிய ஜனநாயக நாடுகள், நான்கு சக்திவாய்ந்த பொருளாதாரங்கள் இதில் உள்ளன. அவை அனைத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல் உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இந்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும், சீன அச்சுறுத்தல் விவகாரத்தில் நாம் தூங்கி விட்டோம் என்று கருத்து தெரிவித்தனர்.

`காஷ்மீருக்குள் சீனா வந்தால்கூட பரவாயில்லை!’ - ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை

இந்தியாவின் வடக்கு எல்லையில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டருகே சீனா 60,000 -க்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. மேற்கு நாடுகள் சீனாவை நிறையவே ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டது. முந்தைய அரசு அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமைகளை சீனா திருடிச் செல்ல அனுமதித்தது. சீனாவுக்கு எதிரான அச்சுறுத்தலில் ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்நோக்கி உள்ளார்கள்.

மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ

உலகம் முழுவதுக்கும் கொரோனா பரவியதற்கு சீனா தான் காரணம் என ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்து வருவதால், சீனா ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி வருகிறது. அவர்கள் செய்ததற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு