Published:Updated:

``ரஷ்ய அதிபர் புதின் போர்க் குற்றவாளி" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் புதினை போர்க் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

``ரஷ்ய அதிபர் புதின் போர்க் குற்றவாளி" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

ரஷ்ய அதிபர் புதினை போர்க் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Published:Updated:
விளாடிமிர் புதின்

பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா உக்ரைனின் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்திவருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யத் தரப்பினரும், உக்ரைன் தரப்பினரும் பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவருகின்றனர். ரஷ்யா, குடிமக்களின் குடியிருப்புகளின் மீது தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

புதின்
புதின்

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினை போர்க் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குடியரசுக் கட்சியின் எம்.பி லிண்ட்ஸே கிரஹாம் இந்தத் தீர்மானத்தை முன்மொழிய, இதைக் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவருமே ஆதரித்தனர். மேலும் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சக் ஸ்கூமர் இந்தத் தீர்மானம் குறித்துப் பேசினார். அப்போது அவர், ``இந்த அவையிலுள்ள அனைவரும் ஒருமனதாக இணைந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர்க் குற்றவாளி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். ரஷ்யா உக்ரைன்மீது தாக்குதல் நடத்தியதற்குப் புதின் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் குற்றத்திலிருந்து புதின் தப்பிக்க முடியாது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism