Published:Updated:

`கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி இல்லை!' - சர்ச்சையாகும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரைவு

கருக்கலைப்பு ( Pixabay )

அமெரிக்க உச்ச நீதிமன்றம், சட்டபூர்வமான கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து, கருக்கலைப்பு செய்வதை குற்றமயமாக்கும் வரைவு ஒன்றை இயற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. அது குறித்து செய்தி இணையதளம் ஒன்றில் தகவல் வெளியாக, அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம், சட்டபூர்வமான கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து, கருக்கலைப்பு செய்வதை குற்றமயமாக்கும் வரைவு ஒன்றை இயற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. அது குறித்து செய்தி இணையதளம் ஒன்றில் தகவல் வெளியாக, இதற்கு அமெரிக்காவில் உள்ள பெண்கள் மற்றும் சமூகநலச் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

1973-ம் ஆண்டு Roe v Wade என்ற வழக்கில், 'கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அரசியலமைப்பு உரிமை' என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. 1992-ம் ஆண்டு Pennsylvania v Casey வழக்கின் தீர்ப்பில், '22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்' என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா
அமெரிக்கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் கருக்கலைப்பு உரிமைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், அமெரிக்காவில் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து 98 பக்க வரைவு கருத்து ஒன்றை உச்ச நீதிமன்ற நீதிபதி சாமுவேல் அலிட்டோ தற்போது வெளியிட்டுள்ளார். 'நீதிமன்றத்தின் கருத்து' என 'பொலிட்டிக்கோ' என்ற செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதில், 'கருக்கலைப்புக்கு சாதகமான roe மற்றும் Casey நிராகரிக்கப்பட வேண்டும்' எனவும், 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு செவிசாய்க்க வேண்டிய நேரம் இது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு சட்டமானால், அமெரிக்காவில், கிட்டத்தட்ட 26 மாநிலங்களில் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிரானதாக விரைவில் அமல்படுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism