Published:Updated:

`சீனாவுக்குள் விசாரணை; ட்ரம்ப் முன்னிறுத்தும் நிபுணர்கள் குழு!' -கொரோனா விவகாரத்தில் முற்றும் மோதல்

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் தாமதமானது என அமெரிக்க எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 -ஐ கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தடுப்பு நடவடிக்கைகளுடன் சேர்த்து சீனாவையும் தாக்கி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவின் நடவடிக்கையைப் பாராட்டிய ட்ரம்ப், பின்னர் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியதும் சீனாவைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
AP

சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ், சீனாவிலிருந்து உருவானதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனினும் ட்ரம்ப் தொடர்ந்து கொரோனாவை `சீன வைரஸ்' என்றே குறிப்பிட்டு வந்தார். மேலும் சில அறிக்கைகள், கொரோனா என்னும் வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருக்கும் வைரஸ் ஆய்வகத்திலிருந்து உருவானதாகவும் கூறியது. அதை சுட்டிக்காட்டி ட்ரம்ப், சீனாவைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இதனால் கொரோனா வைரஸ் விவகாரம் அமெரிக்கா - சீனா இடையே பயோ வார் என்ற அளவில் பிரச்னை பெரிதாக உருவெடுத்தது. அதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் சீனா உண்மையை மறைப்பதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா தற்போது இரட்டிப்பாக அறிவித்துள்ளது. இந்த மதிப்பு இன்னும் அதிகமாக, அமெரிக்காவின் மதிப்பைவிடவும் அதிகமாக இருக்கலாம் அல்லது அதற்கு சற்று அருகிலாவது இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

``கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாகக் குறைக்கப்படவில்லை. அப்படி நடக்கவும் நாங்கள் விடமாட்டோம்’’ என சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சீனா தெரிந்தே இந்த வைரஸை உருவாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும்” என எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவின் நேருவா ஒபாமா? ட்ரம்ப் நிர்வாகத்தின் தோல்விகளுக்கு பலிகடா ஆக்கப்படும் ஒபாமா!

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், சீனாவிருந்து கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

``சீனாவில் நடப்பது தொடர்பாக சில காலத்துக்கு முன்னர் அவர்களிடம் நாங்கள் பேசினோம். நாங்கள் சீனாவுக்குள் செல்ல விரும்பினோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினோம். ஆனால், அது நடக்க அவர்கள் விரும்பவில்லை.

சீனா
சீனா
New York Times

சீனாவுடனான உறவில் வர்த்தகம் முதல், அனைத்து விதத்திலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதன் பின்னர் இந்த வைரஸ் தொடர்பாக தெரிந்துகொண்டோம். அதில் இருந்து எங்கள் உறவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை” என்றார். மேலும் சீனா, இந்த வைரஸ் விவகாரத்தை வெளிப்படைத்தன்மையுடன் கையாளவில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து ட்ரம்ப், ``கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக விசாரணை நடத்த சில நிபுணர்களை சீனாவுக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்தார். விசாரணையின் மூலம் உண்மை வெளிவரும்" என்றார்.

‘தெரியாமல் நடந்திருந்தால் அது தவறு; ஆனால்...?’  - கொரோனா விஷயத்தில் சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

எனினும் சீனா, `அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிக்காது' என்பதே அனைவரும் சொல்லும் கருத்தாக இருக்கிறது. `ட்ரம்ப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் தாமதமானது' என அமெரிக்க எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 -ஐ கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு