Published:Updated:

`தெற்கு சீன எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்..!’ - அதிகரிக்கும் பதற்றம்

போர்க்கப்பல்
போர்க்கப்பல் ( USS America (LHA 6) )

`சர்வதேச கடல் சட்டம் அனுமதிக்கும் அந்தப் பகுதியிலும் தங்களின் கப்பல் செல்லும்’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெற்கு சீன கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்துள்ள நிலையில் இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு வலுப்பெற்று வருகிறது என்றும் இதனால் பதற்றம் அதிகரிக்கும் என்பதும் ராணுவ ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்

’யூ.எஸ்.எஸ் அமெரிக்கா’ மற்றும் யு.எஸ்.எஸ் பங்கர் ஹில் ஆகிய போர் கப்பல்கள், மலேசியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதே நேரத்தில் சீனக் கப்பல் ஒன்றும் அந்தப் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலைகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா மற்றும் ஆஸ்திரேலியப் போர் கப்பல்களும் அருகாமையில் உள்ள கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த வருடத் தொடக்கத்தில் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவின் பிடியிலிருந்து வெளிவராத போதும் சீனா, தெற்கு சீனக் கடல் பகுதியில் தனது செயல்பாட்டை குறைத்துக் கொள்ளவில்லை. அந்தக் கடல்பாதை சர்வதேச நீர் வழியாகவும், உலகளாவிய கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு அந்தப் பாதை வழியாகச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவ தொடங்கிய ஜனவரி முதலே சீன அரசாங்கம், அதன் கடலோரக் காவல்படை கப்பல்கள், கடல் போராளிகளுடன் சேர்ந்து தெற்கு சீன கடல் பகுதிக்குள் போட்டிபோட்டு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. பிராந்திய கடல்சார் அமலாக்கத்துடனும், மீனவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது சீனா. இந்த மாத தொடக்கத்தில் ஒரு வியட்நாமிய மீன்பிடி கப்பலை சீன ரோந்து கப்பல் மூழ்கடித்ததற்காக அந்த சீன கப்பலை வியட்நாமியர்கள் சிறைபிடித்தார்கள்.

போர்க்கப்பல்
போர்க்கப்பல்
USS America (LHA 6)

இந்த வார இறுதிக்குள் தெற்கு சீன கடல் பகுதியில் புதிதாக இரு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அதில் 12-க்கும் மேற்பட்ட தீவுகளும் கடற்பாறைகளும் உருவாக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. ``சீனா கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், நீண்டகால இலக்குகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது" எனப் பசிபிக் பாதுகாப்பு நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனா அதன் தெற்கு கடல் பகுதிக்குள் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க மிகவும் முரட்டுத்தனமாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வியட்நாமிய படகை மூழ்கடித்தது தொடர்பாக அந்த அரசு சீனாவிடம், ``உலகளாவிய நோய் தொற்றைத் தடுக்க உலக நாடுகள் எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாகச் செல்ல வேண்டும். தெற்கு சீன கடல் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத செயல்களைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தது. ஆனால், அதன் பின்னர் சீன அரசாங்கம் தெற்கு சீன கடல் பகுதியில் உரிமை கோரியது.

முதல் நோயாளி பற்றிய குறைந்தபட்ச விவரங்களைக் கூட சீனா வெளியிடாதது ஏன்? - வாசகர் பார்வை #MyVikatan

சர்வதேச தீர்ப்பாயம் சீன கடல் வழி பாதைக்கு கோரிய உரிமையை நிராகரித்துள்ளது. ஆனால், சீனா அந்தத் தீர்ப்பை அங்கீகரிக்காமல் கடற்கரையில் கடற்படைத் தளத்தை கட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

தெற்கு சீன கடலில் அமெரிக்காவுக்கு எந்த எல்லை உரிமைகளும் இல்லாதிருந்தும், அமெரிக்க கடற்படை, இந்தக் கடல் பகுதிக்குள் பல வருடங்களாக அமைதியாகத்தான் இருப்பதாகத் தெரிவிக்கிறது அமெரிக்கா. சீனாவின் கடல்பகுதி எல்லைகளை ராணுவ மயமாக்கியதற்காக சீனாவை அமெரிக்கா கண்டித்திருக்கிறது.

``எங்களுடைய தொடர் செயல்பாடுகள் தெற்கு சீன கடல் பகுதியில் இருந்து வந்தாலும், நாங்கள் எங்களின் நேசநாடுகளுக்கு தொலைதூரப் பயணங்களில் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறோம்” என்கிறார் அமெரிக்க இந்தோ பசிபிக் பிரதிநிதி லெப்டினென்ட் நிக்கோல் ஸ்வெக்மென்.

பேர்க்கப்பல்
பேர்க்கப்பல்
USS America (LHA 6)

``அமெரிக்கா தங்களது பொருளாதார நிலைப்பாட்டை உயர்த்துவதற்காக நமது கூட்டாளிகளின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் நோக்கம் தான் என்ன?” எனக் கேள்வி எழுப்புகிறார், தெற்கு சீன கடல் வல்லுநர் ஐயன் ஸ்டோரே. மேலும் தொடர்ந்து ``இவை அனைத்தும் தங்களது இருப்பைத் தெரிவிப்பதற்காகவா அல்லது சீன கப்பலை அதன் செயல்பாட்டில் இருந்து நிறுத்துவதற்காகவா?” என்றும் வினவுகிறார் ஸ்டோரே.

தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் அமைந்துள்ள சரியான இடத்தை இன்தோ-பசிபிக் படை தெரிவிக்கவில்லை. எனினும் அந்தப் போர்க்கப்பல்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று கடற்படை அமெரிக்கப் போர்க் கப்பல்களின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டது. அப்புகைப்படத்தில் கப்பலுடன் யூ.எஸ்.எஸ் பேர்ரி இருந்தது. பயண வேலை நிறுத்த குழு ஒன்று தொடர்ந்து வேலை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல் இருக்குமிடம் மலேசிய கடல் எல்லையில் இருந்து தூரத்தில் உள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள். அந்தப் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் கடல் பகுதிக்கு மலேசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் உரிமை கோருகிறது. கடந்த வாரம் மலேசிய எண்ணெய் நிறுவனத்தின் துளையிடும் ஆய்வுகளை மேற்கொள்ளும் கப்பலான வெஸ்ட் கேப்பல்லாவை மலேசிய கடல் எல்லைக்குள் பின் தொடர்ந்து கண்காணித்து வருகிறது சீன அரசாங்கம்.

போர்க்கப்பல்
போர்க்கப்பல்
USS America (LHA 6)

ஆஸ்திரேலிய பீரங்கி கப்பல் ஹச்.எம். ஏ.எஸ் பேராமட்டாவும் முன்பே திட்டமிட்ட ஒரு செயல்பாட்டில் அமெரிக்க கடற்படை கப்பல் இணைந்துள்ளது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். ``இந்த பேரமட்டா வரிசைப்படுத்துதலை குறைந்தது ஒரு வருடத்துக்கு முன்பாவது நாம் செயல்படுத்தி இருக்க வேண்டும். அது ராணுவ படைகள் நிறைந்த ஒரு பகுதிக்குள் செல்கிறது என்பது தெரியவில்லை” என்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஜென்னிங்ஸ்.

மேலும் அவர் கூறுகையில், `மார்ச் மாதத்திலிருந்து ஜப்பானில் இருந்து தெற்கு சீன கடல் பகுதி வரை சீனா மிகவும் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது’’ என்றும் தெரிவித்தார். மலேசியாவில் நோய்த்தொற்றை குறைப்பதற்காக சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் வேளையில் மலேசிய அரசாங்கம் சீனாவின் போர்க்கப்பலை எந்தவிதத்திலும் எதிர்பார்க்கவில்லை.

நாம் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சீனா தொடர்ந்து மருந்துகளையும் வல்லுநர்களையும் ராணுவ வீரர்களையும் கொரோனா உதவிக்கு அனுப்பி வந்த போதிலும் ராணுவத்தில் உள்ள ஒரு சீனருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்பதுதான்.

USS America will fly, sail or operate wherever international law allows. #FreeAndOpenIndoPacific #WeAreAmerica #HOOYAH

Posted by USS America (LHA 6) on Monday, April 20, 2020

ஒரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ். எஸ் தியோடர் ரூஸ்வெல்ட், தெற்கு சீன கடல் பகுதிக்குள் கொரோனா தொற்று காரணமாகக் சிக்கித் தவித்து வருகிறது. அதில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பல கப்பல்கள் தொற்று காரணமாக சிக்கித் தவித்து வருகிறது.

சீனா அமெரிக்கா இடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு மத்தியில் அமெரிக்காவின் போர்க்கப்பல் தென் சீன கடற்பகுதியில் இருப்பதாக வரும் தகவல்கள் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. எனினும் சர்வதேச கடல் சட்டம் அனுமதிக்கும் எந்தப் பகுதிக்கும் தங்களின் கப்பல் செல்லும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு