Published:Updated:

12 மில்லியன் டாலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி... நடந்தது என்ன?

உசைன் போல்ட்

உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டாலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

12 மில்லியன் டாலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி... நடந்தது என்ன?

உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டாலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
உசைன் போல்ட்

உலகப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) என்ற முதலீட்டு நிறுவனத்தில் பல மில்லியன் டாலரை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டாலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) என்ற முதலீட்டு நிறுவனம், கடந்த ஜனவரி 12-ம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், ``வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த விஷயத்தைச் சட்ட அமலாக்கத்துறைக்கு அனுப்பியிருக்கிறோம். அந்த ஊழியரின் மோசடியால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சொத்துகளைப் பாதுகாக்கவும், நெறிமுறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

உசைன் போல்ட்
உசைன் போல்ட்
ட்விட்டர்

இந்த மோசடி சம்பவத்தில் உசைன் போல்ட்டின் கணக்கும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆய்வுசெய்துவருகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகளும் நீதிக்கு முன் கொண்டுவரப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து வெளியான தகவலில், உசைன் போல்ட்டின் 12 மில்லியன் டாலர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக உசைன் போல்ட்டின் வழக்கறிஞர், ``ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக்கொண்ட ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) என்ற முதலீட்டு நிறுவனத்தில், கணக்கில் வைத்திருந்த உசைன் போல்ட் 12 மில்லியன் டாலரை இழந்திருக்கிறார். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராக இருக்கிறோம்.

உசைன் போல்ட்!
உசைன் போல்ட்!

இப்போது கணக்கில் வெறும் 12,000 டாலர் மட்டுமே இருக்கிறது. அவர் தற்போது இழந்திருக்கும் தொகை அவருடைய வாழ்நாள் சேமிப்பாகும். நிறுவனம் நிதியைத் திருப்பித் தராவிட்டால், நாங்கள் இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம். உசைன் போல்ட் தன்னுடைய பணத்தை மீட்டு நிம்மதியாக வாழக்கூடிய வகையில், இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நாட்டின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. உசைன் போல்ட் கடந்த 2017-ம் ஆண்டிலேயே ஓட்டப்பந்தய விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவர் பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருந்துவருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.