Published:Updated:

`தாலிபன்களால் உக்ரைனுக்கு ஓடினேன், தற்போது ரஷ்யாவால்..!' - ஆப்கானிஸ்தான் அகதியின் குமுறல்

உக்ரைன்

போலந்தில் அகதியாக தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் அஜ்மல் ரஹ்மானி,"இப்போது என்னிடம் எதுவுமில்லை. எனக்கு என் குடும்பத்தின் வாழ்க்கையை விடவும், என் அன்பை விடவும் எதுவும் பெரிதில்லை" என குமுறுகிறார்.

`தாலிபன்களால் உக்ரைனுக்கு ஓடினேன், தற்போது ரஷ்யாவால்..!' - ஆப்கானிஸ்தான் அகதியின் குமுறல்

போலந்தில் அகதியாக தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் அஜ்மல் ரஹ்மானி,"இப்போது என்னிடம் எதுவுமில்லை. எனக்கு என் குடும்பத்தின் வாழ்க்கையை விடவும், என் அன்பை விடவும் எதுவும் பெரிதில்லை" என குமுறுகிறார்.

Published:Updated:
உக்ரைன்

கடந்த 5 நாள்களாகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கும் அந்நாட்டு படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் வாழும் பல்வேறு நாட்டினரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக உக்ரைனிலிருந்து வெளியேறி வெவ்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதுவரை நான்கு நாள்கள் நடந்த போரால் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு, முக்கியமாக போலந்து, ஹங்கேரி மற்றும் ருமேனியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

உக்ரைன்
உக்ரைன்

இந்த வகையில், கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து ஏற்பட்ட நெருக்கடியால் உக்ரைனுக்குச் சென்ற அஜ்மல் ரஹ்மானி மற்றும் அவர் குடும்பத்தினர் தற்போது உக்ரைனிலிருந்து போலந்து நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அஜ்மல் ரஹ்மானி, ``என்னுடைய துரதிஷ்டம், நான் ஒரு போரிலிருந்து ஓடுகிறேன், மற்றொரு நாட்டிற்கு வருகிறேன். பின்னர் மற்றொரு போர் தொடங்குகிறது. நான் மீண்டும் ஓடுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஒரு வருடத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு, உக்ரைனில் அமைதியின் இருப்பிடத்தை அடைந்ததாக உணர்ந்தேன். ஆனால், இந்த வாரம் நானும் என் குடும்பமும் இந்த முறை ரஷ்ய படைகளின் தாக்குதலால் போலந்துக்கு ஓடி வந்திருக்கிறோம். எனக்கு ஆப்கானிஸ்தானில் தனி வீடு, தனி கார், நல்ல சம்பளம் என மகிழ்ச்சியான வாழ்க்கை இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு எனக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டது. அதனால், உக்ரைனுக்கு வந்தேன். நான் என்னுடைய கார், வீடு என அனைத்தையும் விற்றுவிட்டேன்... இப்போது என்னிடம் எதுவுமில்லை. எனக்கு என் குடும்பத்தின் வாழ்க்கையை விடவும், என் அன்பை விடவும் எதுவும் பெரிதில்லை" என்று உருக்கமாகப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism