Published:Updated:

`சட்டச் சிக்கல்; அரசியல் அடைக்கலம்!’ - நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்ப விஜய் மல்லையா தீவிர முயற்சி

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி அளவுக்கு கடன்பெற்றுவிட்டு அதைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாகத் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது குற்றம்சாட்டப்பட்டது. எஸ்.பி.ஐ தலைமையில் 17 வங்கிகள் அளித்த புகாரின்பேரில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை மல்லையா மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருக்கின்றன.

சிபிஐ
சிபிஐ

இங்கிலாந்தில் தங்கியிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றன. விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்திய விஜய் மல்லையாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரவில்லை. அவரது மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் கடந்த மே 14-ம் தேதி நிராகரித்தது.

இங்கிலாந்து சட்டப்படி தீர்ப்பு வெளியான 28 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் நாடு கடத்தப்பட வேண்டும். இதையடுத்து, விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவரும் பணிகளில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மும்பையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவரை அங்கு கொண்டுவந்து ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அவருடன் சிபிஐ அதிகாரிகளும் உடன் வருவார்கள் என்று தகவல் நேற்று வெளியானது.

`ஆர்தர் ரோடு சிறை; சிபிஐ அலுவலகம்!’ - மும்பை அழைத்துவரப்படும் விஜய் மல்லையா
விஜய் மல்லையா
விஜய் மல்லையா

இந்தநிலையில், விஜய் மல்லையாவசி இந்தியா கொண்டுவருவதில் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக என்.டி.டி-வியிடம் பேசிய இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர், `உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்றால், வேறு எந்தவிதமான சட்டப் பிரச்னைகளும் இருக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்திருந்தாலும், அவரை நாடு கடத்துவதற்கு முன்பாக மற்றொரு சட்டச் சிக்கலைத் தீர்க்க வேண்டும். தற்போதைய சூழலில் அது குறித்து இதற்குமேல் கூற முடியாது. அந்தச் சிக்கலைத் தீர்க்காமல் அவரை நாடு கடத்த முடியாது என்பதே இங்கிலாந்து சட்டப்படி நிதர்சனம். அந்தப் பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

குறிப்பிட்ட அந்தச் சட்டச் சிக்கலைத் தீர்க்கும்வரை விஜய் மல்லையா இங்கிலாந்திலேயே பிணையில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்ப தன்னாலான அனைத்து முயற்சிகளையும் விஜய் மல்லையா செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்துப் பேசிய சிபிஐ அதிகாரி ஒருவர், ``அவர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். முதலில் நீதிமன்ற உத்தரவு எங்கள் கைக்கு வரட்டும். அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தெரிவிப்போம்’’ என்றார்.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா
AP

இந்தியாவில் ஏற்கெனவே இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக விஜய் மல்லையா இருந்திருக்கிறார். இதனால், அரசியல்ரீதியாக இங்கிலாந்தில் அடைக்கலம் கோரவும் அவருக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதையும் கருத்தில் வைத்தே சிபிஐ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு