Published:Updated:

உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கை; தன்னார்வலர்களுக்கு புதின் அனுமதி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( AP )

உக்ரேனிய படைகளுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் தன்னார்வலர்கள் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அனுமதி வழங்கியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கை; தன்னார்வலர்களுக்கு புதின் அனுமதி!

உக்ரேனிய படைகளுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் தன்னார்வலர்கள் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அனுமதி வழங்கியுள்ளார்.

Published:Updated:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( AP )

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில் கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைனில் தாக்குதலை தொடங்கிய ரஷ்யப் படைகள், தொடர்ந்து 16-வது நாளாக உக்ரேனிய படைகளுக்கு எதிராகப் போர்புரிந்து வருகின்றனர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடங்கிய நிலையில், கடந்த திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனை ஏற்றுக்கொள்ள நேட்டோ அமைப்பு தயாராக இல்லை. அவர்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சுகிறார்கள். இனி புதின்தான் பேச வேண்டும்" என கூறியிருந்தார். மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு தரப்பினரும் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமுகமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரேனிய படைகளுக்கு எதிராகப் போராட சிறப்பு ராணுவ நடவடிக்கையில் தன்னார்வலர்கள் பங்கேற்க அனுமதியளித்திருக்கிறார். ரஷ்ய பாதுகாப்புத்துறை செர்ஜி ஷோய்குவுடன், தொலைக்காட்சி வாயிலாக பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய புதின், ``கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாதிகளுக்கு, பணத்திற்காக அல்லாமல் தன்னார்வ அடிப்படையில் உதவ விரும்புபவர்கள் இருப்பதை நீங்கள் கண்டால், அவர்களைப் பாதியிலேயே சந்தித்துப் போர் மண்டலங்களுக்கு செல்ல அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்" என கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism