Published:Updated:

`ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால்...!' - உக்ரைன் அதிபர் சொல்வதென்ன?

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அரசு முக்கிய நிபந்தனை ஒன்றை முன்வைத்திருக்கிறது.

`ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால்...!' - உக்ரைன் அதிபர் சொல்வதென்ன?

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அரசு முக்கிய நிபந்தனை ஒன்றை முன்வைத்திருக்கிறது.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாங்குதல் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால், உக்ரைனில் ராணுவத்தினர் ம்மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ரஷ்ய மக்களும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் பல போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஜெர்மனி கூட உக்ரைனுக்கு போர் ஆயுதங்களை வழங்கி உதவ இருப்பதாகக் கூறியிருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
AP

இந்த சூழலில், போரில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்யா அண்மையில் கூறியிருந்தது. இந்த நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அரசு முக்கிய நிபந்தனை ஒன்றை முன்வைத்திருக்கிறது. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ``ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தாயார், ஆனால் பேச்சுவார்த்தை பெலாரஸில் நடந்தால் அதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். வார்சா, இஸ்தான்புல், புடாபெஸ்ட் மற்றும் பாகூ போன்ற இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் பங்கேற்கும்" என கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படையினர் நடத்தி வரும் போருக்கு முன்னதாக பெலாரஸ் ராணுவ படையும், ரஷ்ய ராணுவ படையும் ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism