Published:Updated:

`` ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்குக் கிடைத்த வெற்றி"- சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ரஷ்யா உடனடியாக போரை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`` ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்குக் கிடைத்த வெற்றி"- சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ரஷ்யா உடனடியாக போரை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில், உக்ரைனில் கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யப் படைகளால் தொடங்கிய போர், இன்றுடன் 22-வது நாளை எட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் பல வாக்களித்தபோதும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தோல்வியுறச் செய்தது.

பின்னர் ஐ. நா சபை, `உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று சர்வதேச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதில், ``உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் ரஷ்யா, உக்ரைன்மீதான போரை நீட்டிக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது" என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்
Alexei Nikolsky

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று ட்வீட் செய்துள்ளார். அதில், "போரை ரஷ்யா உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்குக் கிடைத்த வெற்றி. ரஷ்யா உடனடியாக இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டும். மாறாகப் புறக்கணித்தால் அது ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியிருந்தாலும், ரஷ்யா தரப்பிலிருந்து இதுவரை யாரும் இது குறித்துக் கருத்து தெரிவிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism