Published:Updated:

``நேட்டோவில் இருந்திருந்தால் இந்தப் போர் வந்திருக்காது"- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

``புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்.” - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

``நேட்டோவில் இருந்திருந்தால் இந்தப் போர் வந்திருக்காது"- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

``புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்.” - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர், 26-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்" எனத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில், "நாங்கள் நேட்டோ உறுப்பினராக இருந்திருந்தால், இந்தப் போர் தொடங்கியிருக்காது. நேட்டோ உறுப்பினர்கள் எங்களைக் கூட்டணியில் பார்க்கத் தயாராக இருந்தால், அதை உடனடியாகச் செய்யுங்கள். இங்கு மக்கள் நாளும் இறந்துகொண்டிருக்கின்றனர்.

விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

ஆனால், எங்கள் மக்களின் உயிரைக் காக்க நீங்கள் தயாராக இல்லை என்றாலோ, நீங்கள் எங்களை இதே சூழ்நிலையில் வைக்கவோ, இதே குழப்பத்தில் இருக்குமாறு எங்களை நீங்கள் வற்புறுத்தவோ முடியாது. ஒன்று, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளில் நாங்கள் உங்களை நேட்டோவில் ஏற்றுக்கொள்ளப் போகிறோம் என்று நேரடியாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள் அல்லது இல்லை என்றாவது சொல்லுங்கள் என அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தேன்.

இனி புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார். பேச்சுவார்த்தையின்றி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்தப் போரை நிறுத்துவதற்கு ஒரு சதவிகித வாய்ப்பு இருந்தால் போதும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism