Published:Updated:

ஒரு மாதமாகத் தொடரும் போர்... ``உக்ரைனை ஆதரிக்க, சுதந்திரத்தை ஆதரிக்க வாருங்கள்" - ஜெலன்ஸ்கி அழைப்பு

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆனதையொட்டி, `மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுங்கள்’ என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஒரு மாதமாகத் தொடரும் போர்... ``உக்ரைனை ஆதரிக்க, சுதந்திரத்தை ஆதரிக்க வாருங்கள்" - ஜெலன்ஸ்கி அழைப்பு

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆனதையொட்டி, `மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுங்கள்’ என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன்மீது ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில், உக்ரைன் மீது ரஷ்யப் படையினர் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி தொடங்கிய இந்தப் போர், ஒரு மாதம் முடிந்துவிட்டபோதிலும், முடியாமல் தொடர்கிறது.

இந்த ஒரு மாதத்தில், உக்ரைனில் பல உயிரிழப்புகள், மில்லியன் கணக்கில் உக்ரேனிய மக்கள் அகதிகளாக வெளியேறுதல், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என எத்தனையோ கட்டடங்கள் தகர்ப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இதனால் ரஷ்யாவும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளால் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை போர் நிறுத்துவதாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வெளிப்படையாகக் கூறியிருந்தும், இவர்களுக்கிடையில் நேரடிப் பேச்சுவார்த்தையும் இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில், போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டதையடுத்து இன்று புதிய வீடியோ ஒன்றை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ``இன்று முதல் அல்லது இதற்குப் பின்னராவது உங்கள் நிலைப்பாட்டைக் காட்டுங்கள். உங்கள் அலுவலகங்கள், உங்கள் வீடுகள், உங்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து வாருங்கள். அமைதியின் பெயரால், உக்ரைனை ஆதரிக்க, சுதந்திரத்தை ஆதரிக்க, வாழ்க்கையை ஆதரிக்க உக்ரேனியச் சின்னங்களுடன் வாருங்கள். மக்கள் முக்கியம், சுதந்திரம் முக்கியம், அமைதி முக்கியம்" என அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.