Published:Updated:

`உக்ரைன் போர் எங்கள் காதலை வலிமையாக்கியிருக்கிறது' - மனைவி குறித்து மனம் திறந்த ஜெலன்ஸ்கி

மனைவியுடன் உக்ரைன் அதிபர் ( ட்விட்டர் )

``என்னுடைய மனைவி ஒலேனாவை 26 வருடங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னுடைய மிக நெருக்கமான தோழி.'' - உக்ரைன் அதிபர்

`உக்ரைன் போர் எங்கள் காதலை வலிமையாக்கியிருக்கிறது' - மனைவி குறித்து மனம் திறந்த ஜெலன்ஸ்கி

``என்னுடைய மனைவி ஒலேனாவை 26 வருடங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னுடைய மிக நெருக்கமான தோழி.'' - உக்ரைன் அதிபர்

Published:Updated:
மனைவியுடன் உக்ரைன் அதிபர் ( ட்விட்டர் )

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரின் குடும்பத்தினரும் பிரிந்து வாழ்ந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் பிரிவு தங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதிபர் ஜெலன்ஸ்கி இது தொடர்பாக, ``என் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்காவை 26 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் என்னுடைய மிக நெருக்கமான தோழி. என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர். அதுமட்டுமல்லாமல் அவர் உக்ரைனை அளவு கடந்து நேசிக்கிறார். இந்தப் போரால் ஏற்பட்ட பிளவை நாங்கள் சமாளிக்கிறோம். இது எங்களுக்குள் இருக்கும் அன்பை இன்னும் ஆழப்படுத்தியிருக்கிறது. இன்னும் நாங்கள் தொடர்ந்து காதலித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மேலும் உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா கூறுகையில், ``என்னுடைய கணவர் தன் குழந்தைகளைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார். கடந்த ஐந்து மாதங்கள் உக்ரைனில் வாழும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக மோசமான காலமாக இருக்கிறது. எங்களுடைய உணர்ச்சிகளை நாங்கள் எவ்வாறு சமாளிக்கிறோம் என்பதே தெரியவில்லை. போர் தொடங்கியதிலிருந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரால் வீட்டுக்கு வந்த குழந்தைகளைப் பார்க்க நேரமில்லை. இது எங்களுக்குக் கடினமான நேரம்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!