Published:Updated:

ஜி7 மாநாடு: உக்ரைன் போரைக் குளிர்காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! - ஜெலன்ஸ்கி கோரிக்கை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் போரை குளிர்காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் பேசியிருக்கிறார்.

ஜி7 மாநாடு: உக்ரைன் போரைக் குளிர்காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! - ஜெலன்ஸ்கி கோரிக்கை

உக்ரைன் போரை குளிர்காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் பேசியிருக்கிறார்.

Published:Updated:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு `ஜி-7' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான `ஜி-7' மாநாடு ஜெர்மனியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக ஜெர்மனிக்குச் சென்ற பிரதமர் மோடியை இன்று ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ஜி-7 மாநாடு
ஜி-7 மாநாடு

இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் நிலைமை பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொளி வாயிலாக இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``எங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் உக்ரைன் போரை குளிர் காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறோம். ரஷ்யா கீவ்-மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்த வேண்டும். புதினின் படைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு மேலும் ஆயுதங்களை வழங்க வேண்டும்'' என்று ஜி-7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!