Published:Updated:

`அபிநந்தனை உடனே விடுவித்தோம்; எல்லாம் இதற்காகதான்!’ - ஐ.நாவில் இம்ரான்கான்

imrn khan
imrn khan

பாகிஸ்தானில் போராளி அமைப்புகள் எதுவும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக எங்கள் குரல் கோபத்துடன்தான் இருக்கிறது. தீவிரவாதம் மனிநேயத்துக்கான சவால். ஆகவே, நாம் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் ஒருபகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், ``தீவீரவாதத்துக்கு எதிராக உலகம் ஓரணியில் திரள வேண்டும். பிளவு இல்லாமல் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் செய்தி. இந்தியாவில் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மூலம் அடையாளப்படுத்தப்படும் திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் நிதிசார்ந்த திட்டங்கள் உலகத்துக்கு உதாரணமாக உள்ளன. இந்தியாவில், 2025-க்குள் காசநோய் ஒழிக்கப்படும்.

modi at un
modi at un

சர்வதேச சவால்களை இந்தியா சமாளித்துவருகிறது. சிறந்த திட்டங்களுக்காகக் கூட்டு நடவடிக்கையை நாங்கள் நம்புகிறோம். 37 கோடி ஏழை மக்கள் வங்கிக் கணக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளைத் தொலைத் தொடர்பு மூலமாக இணைக்க திட்டம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான பண்பாடு இந்தியப் பண்பாடு. இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணம். வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்.

``யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் கனியன் பூங்குன்றனார் கூறியிருக்கிறார்"

அனைத்து மக்களையும், எங்கள் மக்களாக கருதுகிறோம். புது இந்தியா பன்னாட்டு நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும். `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் கனியன் பூங்குன்றனார் கூறியிருக்கிறார். பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவு அளித்து எங்களைக் காயப்படுத்தி வருகின்றன. அதே நேரம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளோம்” என்று பேசினார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார்.

imarankhan at un
imarankhan at un

அவர் பேசுகையில், மோடியை தவறுதலாக `ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக்காட்டிலும், கூடுதலாக இம்ரான் கான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும், காஷ்மீரில் சிறப்பந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவும், அணு ஆயுதம் தொடர்பாகவுமே அவர் பேசியுள்ளார்.

இம்ரான் கான், ``வழக்கமான போர் ஆரம்பமானால், எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நாடு 7 மடங்கு அண்டை நாட்டைவிட சிறியதாக இருக்கும்பட்சத்தில், சுதந்திரத்துக்காக உங்கள் மரணம் வரை நீங்கள் ஒன்று சண்டையிட வேண்டும் அல்லது சரணடைய வேண்டும்.

சிறப்பந்தஸ்து நீக்கப்பட்டதை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? காஷ்மீரில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இம்ரான் கான்

`நாங்கள் என்ன செய்யபோகிறோம்’ இந்தக் கேள்வி எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன். என்னைப்பொறுத்தவரை கடவுள் ஒருவர்தான். அணுஆயுத நாடு ஒன்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும்போது, அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பாகிஸ்தானில் போராளி அமைப்புகள் எதுவும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் குரல் கோபத்துடன்தான் இருக்கிறது. தீவிரவாதம் மனிதநேயத்துக்கு எதிரான சவால். ஆகவே, நாம் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்” என்றார். காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், ``பில்லியன் மரங்களை நம் நாட்டில் நட்டு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால், ஒரு நாடு மட்டும் இதைத் தனியாக சாதித்துவிட முடியாது.

imran khan
imran khan

காலநிலை மாற்றத்தின் ஆபத்துகளை எதிர்ப்பதில் பணக்கார நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. மேற்கு உலகம் இஸ்லாம் குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று வெறுப்பு உருவாக்கப்படுகிறது. சிறப்பந்தஸ்து நீக்கப்பட்டதை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? காஷ்மீரில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு அவர்களும் வெளியே வருவார்கள், அப்போது, ராணுவம் அவர்களை சுட்டுத்தள்ளும்” என்றார்.

புல்வாமா தாக்குதல் :

புல்வாமா தாக்குதல் பற்றி பேசிய அவர், `புல்வாமா தாக்குதலின்போது, இந்தியா எங்கள் மீது குற்றம் சுமத்தியது. பாகிஸ்தானின் தலையீடு இருந்தது குறித்து இந்திய அரசு ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் விமானங்களை அனுப்பி எங்கள் மீது குண்டுவீசினார்கள். நாங்கள் பதிலடி கொடுத்தோம்; அவர்களின் ஒரு பைலட்டை நாங்கள் விடுவித்தோம். நாங்கள் உடனடியாக அவரை விடுவித்ததற்கு காரணம், அமைதியை விரும்பும் காரணத்தால்தான். இதை சமாதான நடவடிக்கையாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, மோடி `பாகிஸ்தானுக்கு எதிரான பாடத்தை கற்பிப்போம்’ என்று பிரசாரம் செய்துவருகிறார்” என்று பேசினார்.

`தவறவிட்டுட்டேன்; சும்மாவிடப் போவதில்லை!'‍- காஷ்மீர் விவகாரத்தில் யு.எஸ்-ஸில் பொங்கிய இம்ரான் கான்
அடுத்த கட்டுரைக்கு