Published:Updated:

``ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவு செய்யும் வரை காத்திருக்கக் கூடாது..!” - ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்

`` `புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது’ என சி.ஐ.ஏ எச்சரித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் கவலைப்பட வேண்டும்” - உக்ரைன் அதிபர்

``ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவு செய்யும் வரை காத்திருக்கக் கூடாது..!” - ஜெலன்ஸ்கி

`` `புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது’ என சி.ஐ.ஏ எச்சரித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் கவலைப்பட வேண்டும்” - உக்ரைன் அதிபர்

Published:Updated:
உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்துவரும் நிலையிலும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் தொடர் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தநிலையில், பலர் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

போர் ஆயுதம்
போர் ஆயுதம்

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ``ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவு செய்யும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கதிர்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்குச் சிகிச்சை அளிக்க மருந்துகள் மற்றும் விமானத் தாக்குதல் முகாம்கள் நமக்குத் தேவைப்படும்.

ஏனென்றால் ரஷ்யப் படைகள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தும். அதை நான் உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே அமெரிக்க சி.ஐ.ஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் ’ரஷ்யப் படைகளின் பின்னடைவு என்பது ஒரு தந்திரம், ஒரு பெரும் அபாயத்தை நிகழ்த்தக்கூடும். புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது’ என எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கை குறித்து உலக நாடுகள் கவலைப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோ பைடன்
ஜோ பைடன்
Evan Vucci

இதற்கு முன்னதாக பிரபல தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ``உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ”மூன்றாம் உலகப்போரைத் தவிர்ப்பது குறித்தும், அணுசக்தி மோதல் சாத்தியமாகும் சூழலைத் தவிர்ப்பது குறித்தும் அமெரிக்கா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism