Published:Updated:

``இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” - பிரதமர் மோடியிடம் விளக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்ய விவகாரம் - மோடி ( ட்விட்டர் )

```பலமுறை பேச்சுவார்த்தைக்கு முயன்றும் தீர்வு எட்டப்படவில்லை. அதனால் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை." - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

``இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” - பிரதமர் மோடியிடம் விளக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

```பலமுறை பேச்சுவார்த்தைக்கு முயன்றும் தீர்வு எட்டப்படவில்லை. அதனால் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை." - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Published:Updated:
ரஷ்ய விவகாரம் - மோடி ( ட்விட்டர் )

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. உக்ரைனின் நான்கு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா அவற்றைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்தது. மேலும், தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்திருக்கிறது. , ஐ.நா-வில் ரஷ்யாவுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா புறக்கணித்து நடுநிலை வகித்தது. அதைத் தொடர்ந்து, நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

அதில், அமைதி வழியில் இந்தப் போருக்குத் தீர்வுகாண வேண்டும் எனவும், இந்தப் போரால் அணுசக்தி நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், அது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதனால் தூதரகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்னை குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
Efrem Lukatsky

இதற்கு பதிலளித்த உக்ரைன் பிரதமர், "இந்தியா மனிதாபிமான முறையில் உக்ரைன் மக்களுக்குச் செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றிகள். உக்ரைன் - இந்தியாவின் உறவை வலுபடுத்துவதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேநேரம் ரஷ்யா, ஆக்கிரமித்த எங்கள் பகுதிகளை இணைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. பலமுறை பேச்சுவார்த்தைக்கு முயன்றும் தீர்வு எட்டப்படவில்லை. அதனால் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என இந்தியாவின் ஆலோசனையை உக்ரைன் அதிபர் மறுத்திருக்கிறார்.