Published:Updated:

Netflix: குழந்தைகளுக்கான தொடரில் `இஸ்லாம் கொள்கைக்கு எதிரான’ காட்சிகள்; சவுதி கண்டனம்!

Netflix (Representational Image)

நெட்ஃப்ளிக்ஸில் சீஸன் 5 வரை வெளியாகியுள்ள இந்த சீரிஸில், சமீபத்தில் வெளியான காட்சிகள் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக உள்ளன என சவுதி மற்றும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் எச்சரித்துள்ளது.

Netflix: குழந்தைகளுக்கான தொடரில் `இஸ்லாம் கொள்கைக்கு எதிரான’ காட்சிகள்; சவுதி கண்டனம்!

நெட்ஃப்ளிக்ஸில் சீஸன் 5 வரை வெளியாகியுள்ள இந்த சீரிஸில், சமீபத்தில் வெளியான காட்சிகள் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக உள்ளன என சவுதி மற்றும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் எச்சரித்துள்ளது.

Published:Updated:
Netflix (Representational Image)

மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில், அனிமேஷன் சீரிஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜுராசிக் வேர்ல்டு கேம்ப் கிரெட்டேசியஸ் (Jurassic World Camp Cretaceous) என்ற அந்தத் தொடரில், ஆறு பருவ வயதினர் ஜுராசிக் உலகத்தில் எப்படித் தப்பிப் பிழைக்கின்றனர் என்பதை காட்டுவதாகக் கதைக்களம் அமைந்துள்ளது. சீஸன் 5 வரை வெளியாகி உள்ள இந்தத் தொடரில், சமீபத்தில் வெளியான காட்சிகள், இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக உள்ளன என சவுதி மற்றும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் எச்சரித்துள்ளது.

LGBTQ
LGBTQ
Photo by Jose Pablo Garcia on Unsplash

அதாவது, அந்தக் கதைக் களத்தில் காட்டப்படும் இரு டீன் ஏஜ் பெண்கள் ஒருவரையொருவர் காதலிப்பதை வெளிப்படுத்திக் கொண்டு, முத்தமிடும் காட்சி இடம் பெற்றிருக்கும். குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, விதிமுறைகளை மீறும் விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து, ரியாத்தை தலைமையிடமாகக் கொண்ட சவுதி ஊடகக் கட்டுப்பாட்டாளர் மற்றும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ``இஸ்லாமிய மற்றும் சமூகத்தின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை மீறுவதாக இக்காட்சிகள் உள்ளன. குழந்தைகளுக்கான அந்தக் நிகழ்ச்சிகளை அகற்ற வேண்டுமென, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை தொடர்புகொண்டு கூறியுள்ளோம். புகாரை தொடர்ந்து அத்தளம் உத்தரவுகளுக்கு இணங்கி செயல்படுகிறதா என்பதைப் பிராந்திய அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

அகற்ற கோரிய காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் பட்சத்தில், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்தச் சம்பவம் குறித்து, சவூதி அரசு நடத்தும் அல் எக்பரியா என்ற செய்தி சேனலில், ``நெட்ஃப்ளிக்ஸ் மூலம் வழங்கப்படும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது'' எனத் தெரிவித்துள்ளது.

வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் உள்ள ஆறு நாடுகள் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமாகும்.