Published:Updated:

ரஷ்ய விவகாரம்: ``வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்க விரும்புகிறீர்கள்?" - இந்தியாவுக்கு அமெரிக்கா கேள்வி

அமெரிக்க வெள்ளை மாளிகை

ரஷ்யா, இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயைத் தருவதாகக் கூறிய ஒப்பந்தத்தை இந்தியா பரிசீலித்துவரும் நிலையில், `வரலாற்றில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்க விரும்புகிறீர்கள்?’ என அமெரிக்கா இந்தியாவிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

உக்ரைனில் 22-வது நாளாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்துவரும் போரால் நாளுக்கு நாள் உக்ரைனைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளும் பொருளாதாரரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன. ரஷ்யாவின் போர் நடவடிக்கை காரணமாக அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்துவருகின்றன. சமீபத்தில்கூட அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இதனால் கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் என்ன மாதிரியான முடிவெடுப்பது எனத் தவித்துவருகின்றன. இந்த நிலையில்தான், ரஷ்யா, தற்போது இந்தியாவுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

அதையடுத்து, ரஷ்யாவின் இந்த ஒப்பந்தத்தை இந்தியா பரிசீலித்துவருவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் ஜாவோவிடம், இந்தியாவின் செயல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜென் ஜாவோ, ``எந்தவொரு நாட்டுக்கும் எங்கள் செய்தி அதுதான். நாங்கள் விதித்த, பரிந்துரைத்த பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். எனினும் இந்தியாவின் நடவடிக்கை அதை மீறும் என்று நான் நம்பவில்லை. ஆனால் வரலாறு எழுதப்படும்போது நீங்கள் எங்கு நிற்க விரும்புகிறீர்கள் என்பதையும் சிந்தியுங்கள்" எனப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism