Published:Updated:

தப்பியோடிய கோத்தபய... பதவி விலகும் ரணில்(?) - இலங்கையின் அடுத்த அதிபர் யார்?!

ரணில் விக்ரமசிங்க - சஜித் பிரேமதாசா

இலங்கையின் அடுத்த அதிபராகிறாரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா?!

தப்பியோடிய கோத்தபய... பதவி விலகும் ரணில்(?) - இலங்கையின் அடுத்த அதிபர் யார்?!

இலங்கையின் அடுத்த அதிபராகிறாரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா?!

Published:Updated:
ரணில் விக்ரமசிங்க - சஜித் பிரேமதாசா

கடந்த வாரம் சர்வதேச அரசியலில் பல பரபர சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒரு பக்கம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக, மறுபக்கம் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு பக்கம், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். சில மாதங்களாகவே அங்கு வெடித்திருந்த மக்கள் புரட்சி, வீரியமடைந்ததன் பலனாகத்தான், தப்பிச் சென்றிருக்கிறார் கோத்தபய. இனி அங்கு யார் ஆட்சிக்கு வருவார்... விரிவாகப் பார்ப்போம்!

தப்பியோடிய கோத்தபய!

கடந்த சில மாதங்களாகவே, `கோத்தபய பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையோடு அறவழியில் போராடிவந்தனர் இலங்கை மக்கள். ஆனால், மக்களின் கோரிக்கைக்கு கோத்தபய செவி சாய்க்கவில்லை. மேலும், பொருளாதார நெருக்கடியும் தீவிரமானது. இந்த நிலையில்தான், ஜூலை 9-ம் தேதி அன்று, கதவுகளை உடைத்துக்கொண்டு அதிபர் மாளிகையான அலரி மாளிகைக்குள் நுழைந்தனர் போராடும் மக்கள். காவல்துறை, ராணுவத்தின் தடுப்புகளை மீறி மக்கள் உள்ளே நுழைய, வேறு பக்கமாகத் தப்பிச் சென்றிருக்கிறார் அதிபர் கோத்தபய.

இலங்கை அதிபர் - கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் - கோத்தபய ராஜபக்சே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`எனது பதவிக்காலம் முடியும் வரை ராஜினாமா செய்யமாட்டேன்' என்று சர்வாதிகார மனநிலையில் வீர வசனம் பேசிய கோத்தபயவை, விரட்டி அடித்திருக்கிறார்கள் இலங்கை மக்கள்!

தற்போது வரை பெரும்பாலான மக்கள் அலரி மாளிகையில்தான் இருந்துவருகிறார்கள். `தீர்வு கிடைக்கும் வரை அதிபர் மாளிகையை விட்டு வெளியேறமாட்டோம்' என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருக்கிறார் கோத்தபய. அவர், தனது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுவிட்டதாகவும், அதை நாளை (ஜூலை 13) நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவரிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதன்படி, நாளைய தினம் கோத்தபய பதவி விலகிய விஷயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, ரணிலும் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். அதிபர், பிரதமர் என இருவரும் ராஜினாமா செய்யவிருப்பதால், அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அடுத்த அதிபர் யார்?

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்படி, அதிபர் பதவி விலகினால், பிரதமரே இடைக்கால அதிபராகச் செயல்படுவார். ஆனால், தற்போது இலங்கையின் பிரதமரும் ராஜினாமா செய்யவிருப்பதால், நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவர் மகிந்த யாபா அபவர்தனே இடைக்கால அதிபராக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், அவரும் ராஜபக்சே கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், நாடாளுமன்றத்தில் அவருக்கான ஆதரவு இருக்காது என்கிறார்கள் இலங்கையின் அரசியல் நோக்கர்கள். இப்படியான நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அதிபராக்க இலங்கை சட்டத்தில் இடமிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கும் எம்.பி-க்களின் ஆதரவு அவசியமாம்.

இலங்கை
இலங்கை

இந்த நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். அந்தக் கூட்டத்தில், `நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கலாம். அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், விருப்ப மனுக்களை அளிக்கலாம். வரும் 20-ம் தேதி அதிபரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, `மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 113 எம்.பி-க்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் சஜித் பிரேமதாசவை அதிபராக்குவோம்' என அறிவித்திருக்கிறது.

இலங்கையின் கம்யூனிசக் கட்சியான ஜெ.வி.பி-யும், `அரசை நாங்கள் வழிநடத்தத் தயார்' என்று அறிவித்திருக்கிறது. இதற்கிடையில், காலி முகத்திடலில் போராடும் மக்களின் பிரதிநிதிகளான 25 பேரிடம் சில கட்சித் தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சந்திப்பில், எதிர்கால அரசியல் செயல்பாடுகள், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் குறித்த யோசனைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தலைவர்கள் விவரிக்க இருக்கின்றனர். மக்களிடமிருந்தும் கருத்துகளைக் கேட்கவிருக்கின்றனர்.

இது தொடர்பாக இலங்கை ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மக்கள் பிரதிநிதி ஒருவர், ``நாட்டு மக்களின் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் கட்சியும் எங்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சியமைக்க நினைத்தால், நாங்கள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை'' என்று கூறினார்.

சஜித் பிரேமதாசா
சஜித் பிரேமதாசா
ட்விட்டர்

அதிபராகும் சஜித் பிரேமதாசா?

நாடாளுமன்றத்தில் அதிபரைத் தேர்வு செய்வதற்காக நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா வெற்றிபெறும் பட்சத்தில், இலங்கையின் புதிய அதிபராக அவர் செயல்படுவார். யாருக்கும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கான விடை யாரிடமும் இல்லை..!