Published:Updated:

பதவி விலகிய லிஸ் ட்ரஸ்; பிரதமர் ரேஸில் நான்கு பேர்! - பரபரக்கும் பிரிட்டன் அரசியலில் அடுத்தது என்ன?

பிரிட்டன்

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் பென் வாலஸ் ஆகியோர் ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பதவி விலகிய லிஸ் ட்ரஸ்; பிரதமர் ரேஸில் நான்கு பேர்! - பரபரக்கும் பிரிட்டன் அரசியலில் அடுத்தது என்ன?

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் பென் வாலஸ் ஆகியோர் ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பிரிட்டன்

கடந்த 2019-ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றதையடுத்து, அந்தக் கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார். மூன்று ஆண்டுக்காலம் ஆட்சியை வழிநடத்திய போரிஸ் ஜான்சன், பொருளாதாரத்தை சரியாகக் கையாளவில்லை என அவருக்கு எதிராக அமைச்சர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகினார். அதன் பிறகு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ்
ட்விட்டர்

அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்ற 45 நாள்களில் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்த பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் எனும் கேள்வி எழுந்திருக்கிறது. அதில் முக்கியமான நான்கு பேர் போட்டியில் இருப்பதாக பிரிட்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் பென் வாலஸ் ஆகியோர் ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
ட்விட்டர்

இதில் பொருளாதாரத்தில் முன் அனுபவம் அதிகமுள்ள ரிஷி சுனக் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஆதரவுக் குரல் எழுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிபந்தனைகளை கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 357 பேரில் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்கும் நபர், நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்க முடியும். எனவே, வரும் திங்கள்கிழமை தேர்தலுக்கான முன்மொழிதல் நடவடிக்கை முடிவடையும். அதே தினத்தில் கட்சி உறுப்பினர்களின் வாக்குப்பதிவும் நடைபெறும்.

 போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்
போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்

இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுபவரை திங்கள்கிழமை இரவு அல்லது அடுத்த நாள் பகல், நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சி அறிவிக்கவிருக்கிறது. இதில் ரிஷி சுனக் அல்லது போரிஸ் ஜோன்சன் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.