Published:Updated:

ராணுவத்தினருக்கு 30,000 வயாக்ரா மாத்திரைகள் வாங்கியது ஏன்? பிரேசில் கொடுத்த விளக்கம்

பிரேசில் ராணுவம்

இந்த மாத்திரையின் டோஸ்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க அல்ல, ஆண்மை குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

ராணுவத்தினருக்கு 30,000 வயாக்ரா மாத்திரைகள் வாங்கியது ஏன்? பிரேசில் கொடுத்த விளக்கம்

இந்த மாத்திரையின் டோஸ்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க அல்ல, ஆண்மை குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

Published:Updated:
பிரேசில் ராணுவம்

பிரேசிலில் உள்ள ராணுவ வீரர்களுக்கு சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வயாக்ரா மாத்திரைகள் வாங்கியதற்கு விளக்கம் தருமாறு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு வழங்கப்பட்டுள்ள விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசிலின் தற்போதைய அதிபரும் முன்னாள் ராணுவத் தலைவருமான ஜெய்ர் போல்சனாரோ தலைமையிலான அரசு , பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் வயாக்ரா மாத்திரைகளை அதிக எண்ணிக்கையில் வாங்கியது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. வயாக்ரா மாத்திரைகள் வாங்குவதற்கு மக்கள் பணத்தை ஏன் செலவிடுகின்றனர்?' என்று அந்நாட்டின் சட்ட வல்லுநரான எலியாஸ் வாஸ் எழுப்பிய குற்றச்சாட்டினைத் தொடர்ந்து இந்த விஷயம் எல்லோராலும் உற்றுநோக்கப்பட்டது. ஊடகங்களும் பிரேசில் அதிபருக்கு எதிரானவர்களும், அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிடம் இதற்கான விளக்கம் அளிக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தனர். 

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனையடுத்து, ராணுவ வீரர்களின் நுரையீரல் பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்படும் வயாக்ரா மாத்திரையினை நுரையீரல் பாதிப்பு சிகிச்சைக்காக பயன்படுத்துகிறோம் என்ற பிரேசில் அரசின் விளக்கத்தை பலரும் நம்பவில்லை. O Globo செய்தித்தாளில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த மாத்திரைகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க அல்ல, ஆண்மைக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கவே பயன்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேசிலிய பாடகியான Zelia Duncan, `நாம் ஆயுதப் படை வீரர்களுக்கு வயாகராவுக்குக் கூட பணம் செலுத்துகிறோம் என்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?' என தனது ட்விட்டர் பதிவில் பகடி செய்துள்ளார். இந்தச் செய்தி தற்போது பேசுபொருளானதைத் தொடர்ந்து பல அரசியல்வாதிகளும், பிரபலங்களும் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism