Published:Updated:

`மேற்கத்திய நாடுகளின் தொடர் பொருளாதாரத் தடைகள்... பெரிதாகக் கவலைப்படாத புதின்' - காரணம் என்ன?!

உக்ரைன் - ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் பற்றி ரஷ்ய அதிபர் புதின் கவலை கொள்ளாதது ஏன்? - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

`மேற்கத்திய நாடுகளின் தொடர் பொருளாதாரத் தடைகள்... பெரிதாகக் கவலைப்படாத புதின்' - காரணம் என்ன?!

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் பற்றி ரஷ்ய அதிபர் புதின் கவலை கொள்ளாதது ஏன்? - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

Published:Updated:
உக்ரைன் - ரஷ்யா

உக்ரைன்மீது தொடர்ந்து ஆறாவது நாளாகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ரஷ்யா. வான்வழி, கடல்வழி, தரைவழி என மும்முனைத் தாக்குதலை நடத்திவரும் ரஷ்யாவைத் தனி நாடாக எதிர்கொண்டுவருகிறது உக்ரைன். போர் தீவிரமடைந்து கொண்டே செல்வதால், போரில் ஈடுபடச் சிறைக் கைதிகளை விடுதலை செய்யவும் முன்வந்திருக்கிறது உக்ரைன். இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவை எதிர்த்துப் போர் செய்யத் தயாராக இருக்கும் ராணுவ அனுபவங்கள்கொண்ட சிறைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்திருக்கிறோம்'' என்று அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்திவருவதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன.

முன்னதாக, ரஷ்யாவின் தீவிர தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிவரும் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவிகள் செய்ய சில நாடுகள் முன்வந்தன. அமெரிக்கா, ரூ. 26,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஜெர்மனியும் `உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்வோம்' என்று அறிவித்தது. நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைனுக்குச் சக்திவாய்ந்த ராணுவ ஆயுதங்களையும், நிதி உதவியையும் வழங்கவிருப்பதாக அறிவித்தது. இதையடுத்து, ``நேட்டோ, உக்ரைனுக்கு உதவி செய்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்'' என்று எச்சரித்தது ரஷ்யா.

உக்ரைன்
உக்ரைன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விவகாரத்தில், நிதி உதவிகள், ராணுவ உதவிகள் போக மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், அந்த நாட்டின்மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றன. பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், `உக்ரைன்மீது விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாமீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்' என்று எச்சரித்து, முதற்கட்டமாக சில பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், `ரஷ்ய அதிபர் புதின் ஒரு சர்வாதிகாரி' என்றும் விமர்சித்திருந்தார். இதன் காரணமாக, `பிரிட்டன் விமானங்கள் ரஷ்யாவில் தரையிறங்கவும் ரஷ்ய வான்வெளியில் பறக்கவும் தடை விதிக்கப்படுகிறது' என்று அறிவித்தது ரஷ்யா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால் இன்னும் அதிகமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இருந்தும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் போரைத் தொடர்ந்து நடத்திவருகிறார் புதின். இந்த நிலையில், `மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைப் பற்றி ரஷ்யா பெரிதும் கவலைப்படாதது ஏன்?' என்கிற விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

இது குறித்து சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் உடனடிப் பாதிப்புகள் என்பது மிக மிகக் குறைவு. ரஷ்ய அதிபர் புதினை பொறுத்தவரை, ஐரோப்பியக் கண்டத்தில் ரஷ்யாவுக்குப் பின்னர் பரப்பளவில் பெரிய நாடாக இருக்கும் உக்ரைனை, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஐரோப்பியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதை புதின் விரும்பவில்லை. இந்தப் போரின் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கும், அவர்களை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பயம் காட்ட வேண்டுமென நினைக்கிறார் புதின். அதனால் எந்தவித பொருளாதாரத் தடைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இந்தப் போரை நிகழ்த்திவருகிறார் புதின்.

ரஷ்யா அதிபர் புதின்
ரஷ்யா அதிபர் புதின்
Alexei Nikolsky

குறிப்பாக, ரஷ்யாவுக்கு அருகிலிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. ஐரோப்பியாவில் கிடைக்கும் மொத்த கச்சா எண்ணெய்யில் 26 சதவிகிதமும், இயற்கை எரிவாயுவில் 38 சதவிகிதமும் ரஷ்யாவிலிருந்தே கிடைக்கிறது. இதனால் ஐரோப்பியச் சந்தைகளில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரித்து, விலையும் உயரும். இந்த விலை உயர்வு உலகம் முழுக்கவே எதிரொலிக்கும். எனவே, இந்தப் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பாதிக்கும் என்பதால், ரஷ்யா இதில் பெரிய கவலை கொள்ளாமல் இருக்கலாம். போர் முடிந்த பிறகு பொருளாதாரத் தடைகள் நீக்கிக் கொள்ளக்கூட வாய்ப்புகள் இருக்கின்றன. நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்கிறார்கள்.

இந்த நிலையில், ``ஐரோப்பா மீது மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தும் வரை போர் தொடரும். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் நீக்கப்பட வேண்டும்'' என்று ரஷ்யா திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism