Published:Updated:

ராணி எலிசபெத்தின் கர்ப்பகால புகைப்படங்கள் ஏன் இல்லை? மர்மத்துக்கு இதுதான் காரணம்!

ராணி இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்தின் குழந்தைப் பருவம் முதல் முதிய பருவம் வரை, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிகழ்வுகளில் பல புகைப்படங்கள் இருக்கும். ஆனால் ராணி எலிசபெத் கர்ப்பமாயிருக்கும் புகைப்படத்தை மட்டும் காணமுடியாது. ஏன் தெரியுமா?

ராணி எலிசபெத்தின் கர்ப்பகால புகைப்படங்கள் ஏன் இல்லை? மர்மத்துக்கு இதுதான் காரணம்!

இரண்டாம் எலிசபெத்தின் குழந்தைப் பருவம் முதல் முதிய பருவம் வரை, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிகழ்வுகளில் பல புகைப்படங்கள் இருக்கும். ஆனால் ராணி எலிசபெத் கர்ப்பமாயிருக்கும் புகைப்படத்தை மட்டும் காணமுடியாது. ஏன் தெரியுமா?

Published:Updated:
ராணி இரண்டாம் எலிசபெத்

தாய்மை அடையும் தருணத்தைப் பலரும் பிறருக்குத் தெரிவித்து மகிழ்ச்சி அடைவதுண்டு. கர்ப்பமாயிருக்கும் வயிற்றோடு அழகழகான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்வதுண்டு. பிரபலங்களில் இருந்து பாமர மக்கள் வரை பெரும்பாலானவர்கள் இந்த அழகான தருணத்தைப் புகைப்படம் எடுத்துப் பதிவிடுகின்றனர்.

Baby
Baby
Photo by Isaac Quesada on Unsplash

ஆனால் நீங்கள் யோசித்ததுண்டா..? நீண்ட காலமாக இங்கிலாந்தை ஆட்சிசெய்த இரண்டாம் எலிசபெத்தின் குழந்தைப் பருவம் முதல், முதுமைப் பருவம் வரை வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிகழ்வுகளில் பல புகைப்படங்கள் இருக்கும். ஆனால் ராணி எலிசபெத் கர்ப்பமாயிருக்கும் புகைப்படத்தை மட்டும் காணமுடியாது. ஏன் கறுப்பு வெள்ளையில்கூட அத்தகைய புகைப்படங்கள் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

தன்னுடைய கர்ப்பகாலத்தின் போது அவர் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையா என்ற கேள்வி எழலாம். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கர்ப்பம் தரிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளன. அதாவது முதன்முதலில் ராணி, தான் கர்ப்பமாயிருப்பதை அறிய வேண்டும். குழந்தையின் பாலினத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பேபி ஷவர் கிடையாது. குறிப்பிட்ட பயணங்களுக்கு மட்டுமே அனுமதி, 12 வாரங்களுக்குப் பிறகே கர்ப்பமாக இருப்பது அறிவிக்கப்படும், அரண்மனையில் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் போன்ற பல விதிகள் உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிற அரச குடும்பங்களில் கர்ப்பகாலத்தைத் திருவிழாவைப் போலக் கொண்டாடும் சமயத்தில், ராணி எலிசபெத்தின் அரச குடும்ப கர்ப்பிணிகள் வெளியில் செல்வத்தையும், பொது வெளியில் பேசவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது கர்ப்பகாலம் பற்றிய அரச குடும்பத்தின் பழஞ்சிந்தனைகளின்படி எலிசபெத் தன்னுடைய கர்ப்பத்தை மறைக்க வேண்டியதாயிற்று.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்

1948-ம் ஆண்டில் அவர் முதன் முறையாக கர்ப்பம் தரித்தார். அப்போது கர்ப்பம் குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிடவில்லை. புகைப்படங்களும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நான்கு முறை கர்ப்பம் தரித்தபோதும் எலிசபெத் தொடர்ந்து இந்த நடைமுறையையே பின்பற்றினார்.

இந்த பாரம்பர்யத்தை உடைத்த முதல் அரச குடும்ப இளவரசி டயானா தான். அரண்மனையில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற பாரம்பர்யத்தை உடைத்து, இளவரசர் வில்லியம்ஸை மருத்துவமனையில் பெற்றெடுத்தார்.