Published:Updated:

``வீடே இல்லை... `கோ ஹோம்’ என்பது நேரத்தை வீணடிக்கும் செயல்” - ரணில் விக்ரமசிங்க காட்டம்

ரணில் விக்ரமசிங்க

``சிலர் நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுகின்றனர்.'' - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க

``வீடே இல்லை... `கோ ஹோம்’ என்பது நேரத்தை வீணடிக்கும் செயல்” - ரணில் விக்ரமசிங்க காட்டம்

``சிலர் நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுகின்றனர்.'' - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க

Published:Updated:
ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் சரியான தீர்வு எட்டப்படவில்லை. இதன் காரணமாக புதிய அதிபராகப் பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, ``சிலர் நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுகின்றனர். நீங்கள் போராட்டம் எதிலும் ஈடுபட வேண்டாம். ஏனென்றால் எனக்குச் செல்வதற்கு வீடு எதுவும் கிடையாது. என்னை வீட்டுக்குப் போகும்படி வலியுறுத்துவது நேரத்தை வீணடிக்கும் செயல். அதற்கு பதிலாக, போராட்டக்காரர்கள் எரிந்துபோன எனது வீட்டை கட்டியெழுப்ப முயல வேண்டும்.

இலங்கை
இலங்கை

வீடு எதுவும் இல்லாத ஒருவரிடம் சென்று வீட்டுக்குப் போகும்படி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனது வீடு மீண்டும் கட்டப்பட்ட பின்னர், போராட்டக்காரர்கள் என்னிடம் வீட்டுக்குச் செல்லும்படி வலியுறுத்தலாம்.

நாட்டில் போராட்ட சூழலால் ஏற்பட்டிருக்கும் அமைதியற்ற நிலையால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணம் பெறுவதற்கான சாத்தியப்பட்ட ஒப்பந்தம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை குற்றம்சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு மாறாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுவித்து கடனை அடைக்க வேண்டும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!