Published:Updated:

பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம்.... இந்தியாவில் பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயருமா?!

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதைக் குறிப்பதே பிரெக்ஸிட் (Brexit - British Exit) என்பது பொருள்.

சர்வதேச அளவில் கடந்த சில வருடங்களாகவே அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, பிரெக்ஸிட் ஒப்பந்தம். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதைக் குறிப்பதே பிரெக்ஸிட் (Brexit - British Exit) என்பது பொருள். பிரெக்ஸிட் இழுபறியில் தெரசா மே பதவி விலக, பிரிட்டனைக் காப்பாற்றுவார் என நம்பி ஆட்சியை போரிஸ் கையில் ஒப்படைத்தது, அந்நாட்டு பாராளுமன்றம். தற்போது தேன்கூட்டில் கைவிட்டு களைத்த கதையாக அலறிக்கொண்டிருக்கிறார்கள், பிரிட்டிஷ் அமைச்சர்கள்.

Brexit
Brexit

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், பிரிட்டனுக்குச் சாதகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், ஒப்பந்தமின்றியே பிரிட்டன் வெளியேறும் எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார், போரிஸ். அப்படி ஒப்பந்தமின்றி வெளியேறும்பட்சத்தில், பொருளாதாரரீதியாக பிரிட்டன் பெரும் சரிவினைச் சந்திக்கும். எல்லைப் பாதுகாப்பு, குடியுரிமை, வர்த்தகம், போக்குவரத்து, உணவு கொள்முதல் எனப் பல்வேறு விஷயங்களில் இங்கிலாந்து சிக்கல்களைச் சந்திக்கும். இந்நிலையில், ஒப்பந்தமின்றி பிரெக்ஸிட் நிறைவேற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்பு நிலவிய சூழலில், அதை நிறைவேற்றுவதற்கு எதிராகப் பெரும்பான்மை வாக்குகள் அளித்து, போரிஸ் கையிலிருந்து அதிகாரத்தைப் பறித்திருக்கிறது பிரிட்டிஷ் பாராளுமன்றம்.

இந்நிலையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், ஒப்பந்தமின்றி பிரிட்டன் வெளியேறுவதற்குத் தடை விதித்து அதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கெனவே பல ஆண்டுகளாகத் தள்ளிப்போகும் பிரெக்ஸிட், மீண்டும் அடுத்த வருடம் ஜனவரி மாதம்வரை ஒத்திவைக்கப்படும்.

பிரதமரானதும் தன்னுடைய முதல் தோல்வியைச் சந்தித்திருக்கும் போரிஸ், தன்னுடைய எண்ணம் நிறைவேற, பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை தினமான அக்டோபர் 19-ம் தேதிக்கு முன்னரே மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முழங்கி இருக்கிறார்.

Boris Johnson
Boris Johnson

மேலும், பாரிஸின் கன்செர்வேடிவ் கட்சியிலிருந்து விலகிய அமைச்சர் லீ, பாராளுமன்றக் கூட்டத்தின்போது எழுந்து நடந்து சென்று எதிர்க்கட்சியினரோடு இணைந்து அமர்ந்துகொண்டார். இவரைத் தொடர்ந்து பாரிஸின் அரசாங்கத்தை எதிர்த்து 21 எம்.பி-க்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தெரசா மே கண்ட அதே சரிவை போரிஸ் காண வாய்ப்பிருக்கிறது.

இங்கு, நாம் விடைகாண வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்றுதான். இந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் இந்தியாவில் எத்தகைய பாதிப்புகள் இருக்கும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரிட்டனில் மிக அதிகமான முதலீடுகளைச் செய்திருக்கும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. சுமார் 800 இந்திய கம்பெனிகள் பிரிட்டனில் முதலீடு செய்திருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம், அவர்களுக்கு மொத்த ஐரோப்பியச் சந்தையையும் அடைவதற்கான வழியாக பிரிட்டன் அமைந்ததே. முக்கியமாக, இந்தியாவில் நாளில் ஒரு பங்குத் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி என்பது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா யூனியன் வசம் உள்ளது. இப்படி வர்த்தகரீதியாக இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் மிக அதிகமாக ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது.

Brexit
Brexit

பொருளாதார வல்லுநர்கள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்து பற்றிக் குறிப்பிடும்போது, ``இந்த ஒப்பந்தத்தால் ஏற்படும் அதிகப்படியான செலவும், டாலரின் மதிப்பு கூடுதலும் இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடைய செய்யக்கூடும். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்திய அரசு கூடுதல் சுங்க வரியைக் குறைக்க முயலும். ஏற்கெனவே வீழ்ச்சியிலிருக்கும் பொருளாதாரம் இதனால் கூடுதல் நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்கும். பங்குச்சந்தை வீழ்ச்சி, தங்கம், கேஜெட்ஸ் விலையேற்றம் ஆகியவை நிகழ வாய்ப்பிருக்கின்றன. பிரிட்டனின் பணமான பவுண்ட் ஸ்டெர்லிங், மதிப்பு இழப்பின் காரணமாக பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் பல நஷ்டமடையும். எல்லாவற்றையும்விட அதிகமாக இந்தியாவின் ஐ.டி துறை இதனால் கடும் பாதிப்புக்குள்ளாகலாம்" என்கின்றனர், அவர்கள்.

அதேசமயம், இந்தியா ஏற்றுமதியைவிட அதிக இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால், பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மதிப்பு வீழ்ச்சி இந்தியாவிற்கு நன்மையைத் தரவல்லது. பிரிட்டனில் படிப்பு செலவு, அங்கு செல்வதற்கான செலவு ஆகியவை மிகவும் குறையும். இந்தச் சமயத்தில் பிரிட்டனில் முதலீடு செய்ய தயங்குபவர்களுக்கு இந்தியாமீது கவனம் திரும்பும். இந்தியா - பிரிட்டன் இரு நாடுகளுக்கு இடையேயான (Bi-lateral treaties) ஒப்பந்தங்கள் வலுப்பெறும். முக்கியமாக, பிரிட்டனின் மனிதவள தேவை அதிகரிக்கும். இந்தியர்களின் ஆங்கிலப் புலமையால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு பிரிட்டனில் அதிகரிக்கும்.kh

Brexit
Brexit

பிரிட்டனில், பிரெக்ஸிட் அரசியல் பிளவை ஏற்படுத்தியிருப்பதைப்போலவே, இந்தியாவில் கருத்துப் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிஜம். இந்நிலையில், உலகச் சந்தையில், உலக அரசியலில், உலக வரைபடத்தில் ஏற்படவிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களுக்கான இந்தியா தன்னை எவ்வாறு தயார்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் முக்கியமானது. கடந்த இரண்டாண்டுகளாகவே இந்த மாதத்தைக் காண இந்தியா தயார் என்றுதான் நீதித்துறையும், ரிசர்வ் வங்கியும் சொல்கின்றன. அதற்கான விடையையும் செயல்வடிவில் இந்தியா விரைவில் அறிந்துகொள்ளும்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு