Published:Updated:

``ராஜினாமா செய்ய மாட்டேன்; நான் கடைசி பந்துவரை ஆடுவேன்!” - இம்ரான் கான் திட்டவட்டம்

இம்ரான் கான்

``நான் ராஜினாமா செய்ய மாட்டேன். நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு தயாராக இருக்கிறேன்” என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

``ராஜினாமா செய்ய மாட்டேன்; நான் கடைசி பந்துவரை ஆடுவேன்!” - இம்ரான் கான் திட்டவட்டம்

``நான் ராஜினாமா செய்ய மாட்டேன். நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு தயாராக இருக்கிறேன்” என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுமீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வருகிற 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் அவருடைய ஆட்சி பறிபோக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னரே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துவருகின்றன.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்த நிலையில், இம்ரான் கான் அந்த நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றினார். அப்போது அவர், ``பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட வேண்டும் அல்லது பாகிஸ்தான் கடும் விளைவுகளைச் சந்திக்கும் என்று வெளிநாட்டினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்” என்றார். தொடக்கத்தில் அமெரிக்கா என நாட்டின் பெயரை குறிப்பிட்ட இம்ரான் கான் அதன் பிறகு, வெளிநாடு ஒன்று எச்சரிக்கை விடுத்துவருகிறது என மாற்றிக் கூறினார்.

``எனது 20 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் கடைசி பந்துவரை ஆடுவேன். என் வாழ்வில் நான் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக்கொண்டதில்லை. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்குத் தயாராக இருக்கிறேன். நான் அரசியலில் இணைந்தபோது, ​​நீதி, மனிதாபிமானம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றை மட்டுமே என் குறிக்கோளாக கொண்டுவந்தேன்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism