பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா, உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இதன் காரணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மக்களை ஒன்று திரட்டிவருகிறார். இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பித்தபோது, வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் உக்ரைன் நாட்டு வீரர்களுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட கனடியப் படைகளின் முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான வாலி (Wali), உக்ரைன் ராணுவத்தில் தற்போது இணைந்திருக்கிறார். 40 வயதாகும் அவர், ஒரு நாளைக்கு 40 வீரர்களைச் சுட்டுக் கொல்லும் அளவுக்குத் திறமை பெற்றவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல, வாலி உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர் என்றும் கூறப்படுகிறது.

வாலி இது தொடர்பாகச் சமீபத்தில் அளித்த பேட்டியில், ``ரஷ்யா உக்ரைன் மக்கள்மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திவருகிறது. அதனால் நான் உக்ரைன் ராணுவத்துக்கு உதவ விரும்புகிறேன்'' என்று கூறியிருந்தார்.
வாலி, உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருப்பது சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.