Published:Updated:

சீன அதிபராக 3-வது முறை பொறுப்பேற்கிறார் ஜி ஜின்பிங்! - மத்தியக் குழு கூட்டத்தில் என்ன நடந்தது?

ஜி ஜின்பிங்

கிட்டத்தட்ட 2300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தின் நோக்கமே ஜி ஜின்பிங்கின் ஆட்சியை நீட்டிக்கத்தான் என்று கூறப்படுகிறது.

சீனாவின் உயர்மட்டத் தலைவர் ஜி ஜின்பிங், தன்னை ஆதரிக்கும் கூட்டாளிகளுக்கு இடமளிக்க, உயர்மட்ட ஆளும் அமைப்பிலிருந்து முக்கிய கட்சித் தலைவர்களை ஓய்வு பெற வைத்து, இன்னும் கூடுதலான அதிகாரச் செறிவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவிருக்கிறார்.

ஒரு வாரம் நீடித்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு சனிக்கிழமையன்று ஒரு புதிய மத்தியக் குழு, கட்சியின் 200 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியத் தலைமையைத் தீர்மானம் செய்தது. இதில் புதிய உயர்மட்டத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவர். பிரதமர் லீ கெகியாங் மற்றும் வாங் யாங், ஜி ஜின்பிங்குடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கவில்லை. அதனால் புதிய மத்தியக் குழுவில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் சீனாவின் உயர்மட்ட ஆளும் அமைப்பிலிருந்து வெளியேறி முழு ஓய்வு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

சீன அதிபராக 3-வது முறை பொறுப்பேற்கிறார் ஜி ஜின்பிங்! - மத்தியக் குழு கூட்டத்தில் என்ன நடந்தது?

ஜி ஜின்பிங் மேலும் ஐந்தாண்டுகளுக்குக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வாழ்நாள் ஆட்சிக்கு வழி வகுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. 69 வயதில், மூத்த கட்சித் தலைவர்களின் ஓய்வு வயது 68-ஐ தாண்டிவிட்டார் ஜி ஜின்பிங். ஆனாலும் புதிய மத்தியக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

லீ மற்றும் வாங் இருவரும் 67 வயதுடையவர்கள் மற்றும் ஓய்வூதிய விதிமுறைகளின் கீழ் கட்சியின் உச்ச பொலிட்பீரோ நிலைக்குழுவில் (Politburo Standing Committee ) மேலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றத் தகுதியுடையவர்கள். மாறாக, சமீப தசாப்தங்களில் முன்னுதாரணங்களை முறித்துக் கொண்டு, கட்சி அதிகாரத்தின் உச்சத்திலிருந்து சீக்கிரமாக ஓய்வு பெறுகிறார்கள்.

சீனாவின் இரண்டாவது உயர்ந்த தரவரிசைத் தலைவரான லி, சீன நாட்டின் அரசியலமைப்பின்படி, பிரதமர் பதவியிலிருந்து மார்ச் மாதத்தில் விலக வேண்டும். பிரதமருக்கு இரண்டு முறை மட்டுமே சேவை செய்ய அனுமதிக்கிறது சீன அரசியலமைப்பு. சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டிற்குத் தலைமை தாங்கும் வாங், லி-யின் சாத்தியமான வாரிசாக முன்னர் சிலரால் பார்க்கப்பட்டார்.

சீன அதிபராக 3-வது முறை பொறுப்பேற்கிறார் ஜி ஜின்பிங்! - மத்தியக் குழு கூட்டத்தில் என்ன நடந்தது?

இவ்விருவரின் ஓய்வு, ஜி தனது சொந்த கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களை நிரப்புவதற்கு நிலைக்குழுவில் மேலும் இரண்டு இடங்களை கொடுத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 2300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தின் நோக்கமே ஜி ஜின்பிங்கின் ஆட்சியை நீட்டிக்கத்தான் என்று கூறப்படுகிறது.

கூட்டத்தின் நிறைவில் உரையாடிய ஜி ஜின்பிங், ``தலையைப் புதைத்து கடினமாக உழை, கடினமாகப் பாடுபடு, தொடர்ந்து முன்னேற உறுதியுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்!” என்று கூறியுள்ளார். மத்தியக் குழுவின் தேர்வைத் தொடர்ந்து, விரைவில் ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.