Published:Updated:

`வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டரம்ப்'-ஏமனில் கொல்லப்பட்ட அல்-கொய்தா துணைத் தலைவர் காஸிம்-அல்-ரிமி

காஸிம்-அல்-ரிமி
காஸிம்-அல்-ரிமி ( Twitter )

கடந்த மாதம் முதலே அரேபியன் பெனின்சுலாவில் உள்ள அல்-கொய்தா (AQAP) அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த காஸிம்-அல்-ரிமி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவின. எனினும் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் இரானின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். அவர் அமெரிக்க வீரர்களையும் இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் தாக்கியதாகக் கூறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்திருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இந்த நிலையில், கடந்த மாதம் முதலே அரேபியன் பெனின்சுலாவில் உள்ள அல்-கொய்தா (AQAP) அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த காஸிம்-அல்-ரிமி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவின. எனினும் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி அரேபியன் பெனின்சுலாவில் உள்ள அல்-கொய்தா (AQAP) அமைப்பு ஒரு ஆடியோவை வெளியிட்டது. அதில் காஸிம்-அல்-ரிமி பேசினார். இதனால் ரிமி கொல்லப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று கூறப்பட்டது. எனினும் அது முன்னரே ரெக்கார்டு செய்யப்பட்ட ஆடியோ என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஏமனில் நடத்தப்பட்ட தாக்குதலில் AQAP அமைப்பில் முக்கியத் தலைவரான காஸிம்-அல்-ரிமி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொல்லப்பட்டதை அறிவித்த அமெரிக்கா, அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பதை அறிவிக்கவில்லை. இதனால் கடந்த மாதமே அவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை இன்னும் உறுதி செய்யமுடியவில்லை.

காஸிம்-அல்-ரிமி
காஸிம்-அல்-ரிமி
AFP

AQAP அமைப்பின் பின்னணி!

காஸிம்-அல்-ரிமி மேற்கத்திய நாடுகளில் நடந்த பல விரும்பப்படாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர். AQAP அமைப்பானது 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவுக்கு ஆதரவு தரும் நாடுகளைக் குறிவைத்து இந்தக் கிளை இயக்கம் தொடங்கப்பட்டது. ஏமனில் இந்த இயக்கம் அரசியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தியதில் வெற்றி கண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் வளங்களையும், வெளிநாட்டினரையும், பாதுகாப்புப் படையினரையும் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கும். இதன் மூலம் சவுதி மற்றும் ஏமன் நாட்டின் அரசாங்கங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இந்த அமைப்பு இருந்து வந்துள்ளது. இந்த இருநாடுகளிலும் நடைபெற்ற பெரும்பாலான தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

`சுலைமானி கொல்லப்பட்ட அதே நாள்; ஏமனுக்கும் குறி!’ - அமெரிக்க ரகசியம் உடைத்த அதிகாரிகள்

எதிர்பாராத நேரத்தில் நடத்தும் தாக்குதல் மூலமாக சில நேரங்களில் சில நகரங்கள் அல்லது கிராமங்களை இந்த அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சவுதி மற்றும் ஏமன் நாடுகளுக்கு இந்த அமைப்பானது பெரும் தலைவலியை அளித்து வந்துள்ளது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் AQAP அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த நாசர்-அல்-வுஹாய்ஷி வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் சர்வதேச அல்-கொய்தா அமைப்பின் இரண்டாவது பெரிய தலைவராகவும் இருந்து வந்தார். நாசரின் மரணத்துக்குப்பின்னர் அவரது இடத்துக்கு வந்தவர்தான் காஸிம்-அல்-ரிமி.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை

வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பில், ``அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவின் பெயரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின்போது ஏமனில் காஸிம்-அல்-ரிமி கொல்லப்பட்டார். இவர் AQAP அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராவார். மேலும், அல்-கொய்தா அமைப்பின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். காஸிம்-அல்-ரிமியின் மரணம், AQAP அமைப்பையும் சர்வதேச அமைப்பான அல் - கய்தா அமைப்பின் வளர்ச்சியையும் தடுக்கும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதுபோன்ற அமைப்புகள் விரைவில் நீக்கப்படுவதற்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதற்கு இந்த மரணம் ஓர் உதாரணம். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இவரின் மரணத்தால் பாதுகாப்பாக இருக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.

பின் செல்ல