Published:Updated:

உக்ரைன்: ``ரஷ்ய ராணுவம் இதுவரை எங்கள் குழந்தைகள் 2 லட்சம் பேரைக் கடத்தியிருக்கிறது!'' - ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளைக் கடத்தியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார்.

உக்ரைன்: ``ரஷ்ய ராணுவம் இதுவரை எங்கள் குழந்தைகள் 2 லட்சம் பேரைக் கடத்தியிருக்கிறது!'' - ஜெலன்ஸ்கி

போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளைக் கடத்தியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

பிப்ரவரி மாதம், 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர், முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவிப் பொதுமக்களையும் ரஷ்யப் படைகள் கொன்று குவித்துவருகின்றன என உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. போரை நிறுத்துவதற்கான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்து குரல் எழுப்பி வருகின்றன.

புதின்
புதின்

இந்த நிலையில், நேற்றைய தினம் உக்ரைன் மக்களிடம் உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, ``போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை வலுக்கட்டாயமாக கடத்தியிருக்கிறது. உக்ரைனிலிருந்து பொதுமக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்துவது ரஷ்யாவின் மிகக் கொடூரமான போர்க்குற்றங்களில் ஒன்றாகும். இந்தக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உக்ரைன் தண்டிக்கும். உக்ரைன் போரில் இதுவரை 243 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 446 பேர் காயமடைந்திருக்கின்றனர். மேலும், 139 பேர் காணவில்லை'' எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism