Published:Updated:

கிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா? - விளக்கம் தரும் துறைவல்லுநர்! #DoubtOfCommonMan

கிராம சபை
News
கிராம சபை

கிராம சபை என்பது மக்களவைக்கு இணையானது என உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபையாகும்.

Published:Updated:

கிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா? - விளக்கம் தரும் துறைவல்லுநர்! #DoubtOfCommonMan

கிராம சபை என்பது மக்களவைக்கு இணையானது என உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபையாகும்.

கிராம சபை
News
கிராம சபை
விகடனின் சிறப்பு #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர்களிடமிருந்து பெறப்பட்ட கேள்விகளில், 'கிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானது என்கிறார்கள்? அது உண்மையா? என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன?' என்ற கேள்வியைச் சந்திரன் என்ற வாசகர் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கான பதிலே இந்தக் கட்டுரை.
Doubt of common man
Doubt of common man

துறை சார்ந்த வல்லுநரான பேராசிரியர் பழனிச்சாமி துரையைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``கிராம சபை என்பது மக்களவைக்கு இணையானது என உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபை. மேலும், கிராம சபைக்கு மாநிலச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட, அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற இயலாது. இந்த கிராம சபைக்கான அதிகாரம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானது கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அந்த மாநில அரசின் பஞ்சாயத்து சட்டத்திற்கு ஏற்ப தான் கிராம சபை செயல்பட முடியும்.

பேரா.பழனிச்சாமி துரை
பேரா.பழனிச்சாமி துரை

தமிழகத்தில் கிராம சபைக்கெனக் குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக கிராமத்தின் நிதிநிலை அறிக்கையை அங்கீகரிப்பது கிராம சபைதான். அதுமட்டுமல்லாமல், அரசாங்க நலத்திட்டங்களுக்குப் பயனாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் கிராம சபைக்குதான் உண்டு.

ஒவ்வோர் ஆண்டும் ஊராட்சியின் தணிக்கை அறிக்கையை கிராம சபையின் மூலமாகத்தான் சமர்ப்பிக்க முடியும். கிராமத்திற்கென வளர்ச்சித் திட்ட அறிக்கையைத் தயாரிப்பதும் அதை ஆமோதிப்பதும் கிராம சபைதான். கிராம சபைக் கூடும்போது ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10% வாக்காளர்களாக இருக்க வேண்டும். இதில் பெண்களும், தலித் இன மக்களும் கட்டாயம் இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றால் அவை கிராம சபையால் அங்கீகரிக்கப்படாது. கிராம சபைக்கூட்டத்துக்குத் தலைமை ஊராட்சிமன்றத் தலைவர்தான். அவர் இல்லையெனில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிராம சபைக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்கலாம். அவரும் வரமுடியவில்லையெனில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அரசு அதிகாரி தலைவராகச் செயல்படுவார். தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் அரசாங்க உத்தரவின்படி கிராம சபை குறைந்தது நான்கு நாள்கள் நடைபெறவேண்டும். அதாவது முறையே ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கட்டாயம் நடைபெற வேண்டும்.

இதைத்தவிர, இதர தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கிராம சபையைக் கூட்டலாம். பேரிடர் சமயத்தில் நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு கிராம சபையை நடத்தலாம். கிராம சபையை நடத்துவதற்கு ஏழு நாள்கள் முன்பாக அதைப்பற்றி அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த அறிவிப்பை நோட்டீஸ் மூலமாகவும் தண்டோரா அடித்தும் தெரிவிக்கலாம். இதில் கிராம சபை கூட்டத்தின் அஜெண்டா மற்றும் அரசாணை ஏதாவது இருந்தால் அதையும் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பு செய்வதற்கென ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ₹1,800 வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களை மக்கள் தெரிந்து கொண்டாலே கிராம சபையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றார்.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!