Published:Updated:

சார்பாதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யும் போது பெற்றோர்கள் தேவையா? | Doubt of common man

Doubt of common man
News
Doubt of common man

சாட்சிகள் இருவரும் 18 வயது நிரம்பியவராக இருத்தல் அவசியம். எனவே பெற்றோர் இல்லாமல் திருமணத்தை பதிவு செய்யலாம்

Published:Updated:

சார்பாதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யும் போது பெற்றோர்கள் தேவையா? | Doubt of common man

சாட்சிகள் இருவரும் 18 வயது நிரம்பியவராக இருத்தல் அவசியம். எனவே பெற்றோர் இல்லாமல் திருமணத்தை பதிவு செய்யலாம்

Doubt of common man
News
Doubt of common man

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் “சார்பாதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யும் போது பெற்றோர்கள் தேவையா? என வாசகர் குரு அய்யனார் கேள்வி எழுப்பியிருந்தார். அக்கேள்விக்கான பதில் இங்கே.

Doubt of common man
Doubt of common man

திருமணத்தை பதிவு செய்யும்போது பெற்றோரின் வருகை அவசியமா? பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்ய முடியாதா போன்றவை பலருக்கும் இருக்கும் சந்தேகம். இது தொடர்பாக தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் வாசுதேவன் அவர்களிடம் பேசினோம். அவர் கூறியதாவது,

“ சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யும் போது மணமக்கள் இருவர் மற்றும் இரு சாட்சிகள் கட்டாயம் உடன் வரவேண்டும். சாட்சிகள் பெற்றோராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாட்சிகள் 18 வயதும் நிரம்பியவராக இருத்தல் அவசியம். இருபாலராகவும் இருக்கலாம். எனவே பெற்றோர் இல்லாமல் திருமணத்தைப் பதிவு செய்யலாம்.

Doubt of common man
Doubt of common man
திருமணம் பதிவு செய்ய என்னென்ன சான்றுகள் தேவை?

மணமகள் 18 வயதும் மணமகன் 21 வயதும் திருமண நாளன்று பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். இதை உறுதி செய்ய வயதுடன் கூடிய அடையாள அட்டை, போட்டோ, சாட்சிகளின் அடையாள அட்டை, திருமணம் நடந்ததற்கான சான்றுகள் ( பத்திரிகை, கோயில் அல்லது திருமண மண்டப ரசீது போன்றவை ). அந்தந்த மத முறைப்படி திருமணம் நடந்ததற்கான சான்றுகள் போன்றவற்றை ஒப்படைக்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களுக்கு என தனித்தனி ஃபார்ம் உள்ளது. இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆன்லைன் மூலம் ரெஜிஸ்டர் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் அப்பாய்ன்மென்ட் பெற்று சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

எத்தனை நாட்களுக்குள் திருமணம் பதிவு செய்ய வேண்டும்?

திருமணமான முதல் மூன்று மாதங்களில் பதிவு செய்திட வேண்டும். அதற்கான பதிவு கட்டணம் 100 ரூபாய். ஐந்து மாதங்கள் வரை பதிவு செய்ய, பதிவுக் கட்டணத்துடன் 50 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். ஐந்து மாதங்களுக்கு மேல் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். திருமணம் நடைபெற்ற இடம், மணமக்கள் வசிப்பிடத்தில் உள்ள திருமண பதிவாளரிடம் பதிவு செய்யலாம். ” இவ்வாறு கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!