Published:Updated:

அதிகரிக்கும் தெரு நாய்கள்... ரேபிஸ் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடா? அரசு அதிகாரிகள் விளக்கம்

தெருநாய்கள் (File Pic)
News
தெருநாய்கள் (File Pic)

அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் தெருக்களில் நடக்க அஞ்சுவதாகவும் கூறியுள்ளனர்.

Published:Updated:

அதிகரிக்கும் தெரு நாய்கள்... ரேபிஸ் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடா? அரசு அதிகாரிகள் விளக்கம்

அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் தெருக்களில் நடக்க அஞ்சுவதாகவும் கூறியுள்ளனர்.

தெருநாய்கள் (File Pic)
News
தெருநாய்கள் (File Pic)

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டு வேலை செய்பவர் ஒருவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. உடனே விருகம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சென்றுள்ளார். ஆனால் தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தெரு நாய்
தெரு நாய்

அதுபோல, கடந்த வாரத்தில், காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு மாணவனையும், மாலையில் தெருவழியாக நடந்து வந்த ஒரு மூதாட்டியையும் தெரு நாய்கள் கடித்துள்ளன. இவர்களும் சென்னை விருகம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சென்றபோது, தடுப்பூசி இல்லையென்று கூறி, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் தெருக்களில் நடக்க அஞ்சுவதாகவும் கூறியுள்ளனர். வீடுகளில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களும் இரவு நேரங்களில் தெருநாய்களின் தொல்லையால், கைத்தடியுடன் இரவில் நடைப்பயிற்சி செய்கின்றனர். அப்போது, வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் தாக்கிவிடுமோ என்று அச்சம் நிலவுவதாகக் கூறியுள்ளனர்.

பொது சுகாதாரத்துறை தடுப்பூசித் திட்ட அலுவலர்  மருத்துவர் வினய்
பொது சுகாதாரத்துறை தடுப்பூசித் திட்ட அலுவலர் மருத்துவர் வினய்

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் ரேபிஸ் வைரஸ் பாதிப்பால், 20 -25 பேர் வரை மரணம் அடைவதாகக் கூறப்படும் நிலையில், தெருநாய்கள் அதிகரித்து வருகின்ற இந்த வேளையில், சென்னை விருகம்பாக்கம் போன்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக, பொது சுகாதாரத்துறை தடுப்பூசித் திட்ட அலுவலரான மருத்துவர் வினய்யிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``இதுகுறித்து நகர மருத்துவ அதிகாரி ஹேமலதாவை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது விருகம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் ரேபிஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகவும், தடுப்பூசிக்காக வந்த மூவரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் வந்து கேட்கவில்லை என்பதாகக் கூறினார்" என்று விளக்கம் தந்தார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்

அடுத்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் பேசினோம். அவர், ``எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தது 20 டோஸ் ரேபிஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் இருப்பு பற்றி தமிழக பொதுசுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.