Published:Updated:

கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!
கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யதார்.  அம்மனுவில் ”மதுரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழைமையான 5300 பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.  இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருள்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால், ஒரு ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழ்வாய்வுப் பணியைத் தொடரவும், பழங்கால பொருள்களைக் கீழடியிலேயே அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக் கூடாது. அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பதுதான் சிறப்பு. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல்தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களைத் தனியாருக்கு இழப்பீடு வழங்கி அரசு பெற நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், கடந்த 19 -ம் தேதி நீதிபதிகள் கீழடி சென்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் கைப்பற்றப்பட்ட பொருள்களை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பன குறித்தும் அகழாய்வு கண்காணிப்பாளரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில், "வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் நாள்களில் மழை அதிகமாக இருக்கும். மேலும், இங்கிருக்கும் நில உரிமையாளர்கள் நிலத்தைத் தர தாமதிப்பதாக" கூறினார். அப்போது நீதிபதிகள் , "நிலத்தைத் தர மறுப்பவர்கள் யார், யார் ? என்பது குறித்து நாளை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், 4 ஆம் கட்ட அகழாய்வை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தி, மாநிலத் தொல்லியல் துறையினருக்கு ஆய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கூறி விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக நாளைக்கு ஒத்திவைத்தனர் .

அடுத்த கட்டுரைக்கு