Published:Updated:

வேதா இல்லம்! தமிழக அரசு உறுதியால் தீபா வழக்கு முடித்துவைப்பு!

வேதா இல்லம்! தமிழக அரசு உறுதியால் தீபா வழக்கு முடித்துவைப்பு!
News
வேதா இல்லம்! தமிழக அரசு உறுதியால் தீபா வழக்கு முடித்துவைப்பு!

வேதா இல்லம்! தமிழக அரசு உறுதியால் தீபா வழக்கு முடித்துவைப்பு!

வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்புத் தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 'தங்கள் பாட்டி சந்தியா, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லம் உள்ளிட்ட பல சொத்துகளை வாங்கினார். அந்த வீட்டில், அத்தை ஜெயலலிதா, தனது தந்தை ஜெயக்குமார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்தார். பின்னர், தியாகராயர் நகருக்கு குடிபெயர்ந்தார்.

தற்போது, தனது அத்தை ஜெயலலிதா மறைந்துவிட்டார். அவர் எந்த உயிலும் எழுதிவைக்காத நிலையில், அந்த சொத்துகளுக்கு தானும், சகோதரர் தீபக்கும்தான் சட்டபூர்வ வாரிசுகள். தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவதுகுறித்து அறிவிப்பு வெளியிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில், வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின் அடிப்படையில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தடை விதிக்க வேண்டும். இது சம்பந்தமாக, தான் அளித்த மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தீபா அளித்த மனுவில் 4 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று அரசு தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார். இதையடுத்து, 'வேதா இல்லம் தொடர்பாக 4 வாரத்தில் பரிசீலனை செய்து ஆணையிட வேண்டும்' என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.