Election bannerElection banner
Published:Updated:

நீதிமன்ற வளாகத்திலேயே பின்பற்றப்படாத நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு!

நீதிமன்ற வளாகத்திலேயே பின்பற்றப்படாத நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு!
நீதிமன்ற வளாகத்திலேயே பின்பற்றப்படாத நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு!

நீதிமன்ற வளாகத்திலேயே பின்பற்றப்படாத நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு!

கோவை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி உயிருடன் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகத்திலேயே பின்பற்றப்படாத நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு!

அரசியல் கட்சித் தலைவர்கள் முதல், சினிமா நட்சத்திரங்கள், நகைக் கடை, துணிக்கடை விளம்பரங்கள் வரை அனைத்திலும் பேனர், கட் அவுட் கலாசாரம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியது. பல அடி உயரங்களில் வைக்கப்படும் ராட்சத கட் அவுட்களால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, உயிருடன் இருப்பவர்களுக்குப் பேனர் மற்றும் கட் அவுட்களை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும், இந்தத் தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலுமே, அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களின் பேனர் மற்றும் கட் அவுட்களில் எந்த மாற்றமும் இல்லை.

நீதிமன்ற வளாகத்திலேயே பின்பற்றப்படாத நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு!

மற்ற இடங்களில்தான் இந்த நிலை என்றால், நீதிமன்ற வளாகத்திலேயே இதே நிலைதான். கோவை நீதிமன்றத்தின், பிரதான வளாகம் முதல் அனைத்து வளாகங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்களின் பேனர்கள் காட்சியளித்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு பளீச் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், ஹைலைட் என்னவென்றால், இந்த பேனர்களை வைத்துள்ளதே வழக்கறிஞர்கள்தான். இந்தத் தடை உத்தரவு பிறக்கப்படுவதற்கு முன்பே, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தடை விதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் ஆகியும் பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு