Published:Updated:

ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!
ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

கேரள மாநிலம் கண்ணூரில் கைதுசெய்யப்பட்ட ஐ எஸ் இயக்க ஆதரவாளர்கள் மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தலச்சேரி நீதிமன்றம் அனுமதிகொடுத்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சிரியா நாட்டுக்குச் சென்று, ஐ.எஸ் இயக்கத்தில் பயிற்சிபெற்ற ஐந்து பேர், மீண்டும் கண்ணூர் திரும்பியதாக தேசிய புலனாய்வு அமைப்புக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைக் கண்காணிக்கும்படி கேரள போலீஸுக்கு மத்திய உளவுத்துறை உத்தரவிட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன், கண்ணூர் டி.எஸ்.பி சதானந்தம் தலைமையிலான போலீஸார், மிதிலாஜ், ரஷித், ஹம்ஸா உள்ளிட்ட 5 பேரை கண்ணூரில் வைத்து கைதுசெய்தனர். விசாரணைக்குப் பின் ஐந்து பேரும் தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 5 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தலச்சேரி நீதிமன்றத்தில் போலீஸார் மனுச் செய்தனர். 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதன்பிறகு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மீண்டும் மிதிலாஜ், ரஷித்,ஹம்ஸா ஆகிய 3 பேரையும் போலீஸ் காவலில் விசாரணை செய்ய, மீண்டும் போலீஸார் மனுச் செய்தனர். அவர்களை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்மூலம் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு