எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வியுடன் விவாதிக்கப்பட்டுவந்த 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது எடுத்துள்ள முடிவு, கடும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது, 2017, பிப்ரவரி 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, மாஃபா பாண்டியராஜன், ஆறுகுட்டி, ஆர்.நடராஜ், சரவணன், சண்முகநாதன், மனோரஞ்சிதம், மனோகரன், மாணிக்கம், சின்னராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க-வின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இந்த 11 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க-வும் கோரவில்லை; சபாநாயகர் தனபாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் பிறகு அந்தக் கட்சி யிருந்து சசிகலா, தினகரன் தரப்பினர் வெளியேற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றுசேர்ந்தனர். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும் ஆனார்கள்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையின்மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். அதை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், தகுதிநீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ‘தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று தி.மு.கழக எம்.எல்.ஏ-வான சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க மேல்முறையீடு செய்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அந்த வழக்கைத்தான், ‘சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார்’ என்று கூறி உச்ச நீதிமன்றம் தற்போது முடித்துவைத்துள்ளது. மேலும், ‘சபாநாயகர் முடிவெடுப் பதற்கு, கால வரையறையை நிர்ணயிக்க முடியாது’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது இந்த ஆட்சிக்காலம் முடியும் வரை சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என்றாலும், அதில் உச்ச நீதிமன்றம் தலையிடாது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சிக் கின்றனர்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், “உச்ச நீதிமன்றம், தன் கடமையை சரிவர செய்யத் தவறிவிட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு போனால், இது சட்டம்… இது சட்டமல்ல என்று சொல்லி தீர்ப்பு வழங்க வேண்டும் அல்லது சபாநாயகரே முடிவெடுக்க வேண்டும் என அனுப்பினால், எந்தத் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், கால வரம்பு குறிப்பிடாமல் ‘சபாநாயகர் முடிவெடுப்பார் என நம்புகிறோம்’ என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

இந்த வழக்கில் முடிவெடுக்க இரண்டு வாரங்களுக்குமேல் தேவையில்லை. இந்தத் தேதிக்குள் சபாநாயகர் முடிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்காவது போட முடியும். சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால், இன்னொரு வழக்கு போட முடியாது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தல் வரை இப்படியே காலத்தைக் கழித்துவிடுவார்கள்’’ என்றார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துருவிடம் பேசினோம். ‘‘கால தாமதம் செய்யப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி. ‘சபாநாயகர் முடிவெடுப்பார்’ என்று சொல்வதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு ஒன்பது மாதங்கள் தேவையா? இந்த உத்தரவை அன்றைக்கே போட்டிருக்கலாமே! இந்த வழக்கை சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்று பலமுறை தி.மு.க தரப்பில் முறையிட்டும், இத்தனை மாதங்கள் கடந்து இப்படியோர் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார் என்றால், ஐந்து மாதங்களில் விசாரித்து வழக்கை முடித்துவைக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் கழித்து விசாரித்தால், அந்த ஆட்சிக்காலமே முடிந்துவிடும். அதன் பிறகு நடப்பது வெறும் போஸ்ட்மார்ட்டம்தான்.

கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் சபாநாயகர் நடுநிலையாக இருப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆகையால், அதற்கு வேறொரு நடைமுறையை உருவாக்க வேண்டும். கட்சித் தாவல் சட்டத்தின் மூலம் கட்சித் தாவல்களைத் தடுக்க முடியவில்லை. கட்சித் தாவலைத் தடைசெய்யும் 10-வது அட்டவணை பயனற்றதாக மாறிவிட்டது. எனவே, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் கேட்டபோது, ‘‘இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கான முழு அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உண்டு. அவர் என்ன முடிவை எடுப்பார் என்பதை நாம் சொல்ல முடியாது’’ என்றார்.

எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் தீர்ப்பு எழுதுவார்கள்!