Published:Updated:

அழிக்கப்படும் பெண் இனம்!

அழிக்கப்படும் பெண் இனம்!

அதிர்ச்சித் தகவல்கள்! விழிப்பு உணர்வு

அழிக்கப்படும் பெண் இனம்!

அதிர்ச்சித் தகவல்கள்! விழிப்பு உணர்வு

Published:Updated:
அழிக்கப்படும் பெண் இனம்!

‘‘ஆண்-பெண் பாலின விகிதத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து

அழிக்கப்படும் பெண் இனம்!

வருவது... அதிர்ச்சி! ஆண் குழந்தை மோகம் குறித்த மக்களின் மனநிலை இன்னும் மாறவில்லை என்பதே உண்மை’’ என்கிறார், பெண் கருக்கொலைக்கு எதிரான தமிழ்நாடு பிரசார அமைப்பின் மாநில அமைப்பாளர் ஜீவானந்தம்.

1000-க்கு 896

“தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தை களின் பாலின விகிதத் தைப் பார்க்கும்போது.. கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவாரூர், கன்னியா குமரி, கோயம்புத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூர், ராமநாதபுரம், நீலகிரி, புதுக்கோட்டை, விருது நகர், காஞ்சிபுரம் ஆகிய 20

மாவட்டங்களில் ஆண் குழந்தை களின் எண்ணிக்கையைவிட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு கடலூரில் 957 பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அத்துடன் 2011-ல் பெண் குழந்தைகளின் விகித எண்ணிக்கை 896 ஆக குறைந்தது, இன்னும் அதிர்ச்சி.

காரணங்கள் என்ன?

`பெண் குழந்தை பாரம், ஆண் குழந்தை வரம்’ என்ற மக்களின் மனநிலைதான் முக்கியக் காரணம். அதற்குத் துணை போகும் அமைப்புகள், அடுத்த காரணம். தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்கேன் மையங்கள் உள்ளன. இங்கெல்லாம் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிவிக்கக்கூடாது என்பது அரசு உத்தரவு. மேலும் பெண் கருக்கொலை தடுப்புச் சட்டம் 1994, அதன் திருத்தங்கள் 2002 மற்றும் மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் 1971 ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையெல்லாம் ஏட்டளவிலேயே உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழிக்கப்படும் பெண் இனம்!

தமிழகத்தில், அரசின் அனுமதியின்றி செயல்படும் ஸ்கேன் மையங்கள் பல. அங்கெல்லாம் பணத்துக்கு ஆசைப்பட்டு, வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. விளைவு... பெண் குழந்தைகள் கருக்கொலை செய்யப்படுகின்றன. பெண் குழந்தை பிறந்த பின்னரும், வேண்டாவெறுப்பாக அதனை வளர்க்கும்போது தேவையான ஊட்டச்சத்து, தடுப்பூசிகள் தரப்படாமல் போக, பெண் குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. 

இந்தச் சரிவு நீடித்தால்...

கடந்த 10 ஆண்டுகளில் கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்ததற்காக 80 ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 23 மையங்கள் மீது மட்டுமே வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அந்த மையங்களின் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை... ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பே! ஆனால், 10 ஆண்டுகள்வரை அவர்களுக்குத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, பெண் பாலின விகிதம் குறைவதைத் தடுக்க... மத்திய, மாநில சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பெண்களின் எண்ணிக்கையில் இந்தச் சரிவு நீடித்தால், எதிர்காலத்தில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காத நிலை ஏற்படலாம். இன்று கேரளாவில், 1000:1084 என்ற விகிதத்தில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மணமகளாக கேரள பெண்களின் வருகை சமீபமாக அதிகரித்து வரும் சமூக மாற்றத்தையும் கவனிக்க வேண்டும்’’ என்று சுட்டிக்காட்டினார், ஜீவானந்தம்.

கடும் நடவடிக்கை உண்டு!

அழிக்கப்படும் பெண் இனம்!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மாநிலத் தலைவர் கே.செந்தில், “வயிற்றிலிருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து அதை கருக்கொலை செய்வது சட்டப்படி குற்றம். கடலூரில் டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் கருக்கொலை செய்வதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி அவரது மருத்துவப் பதிவை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளோம். இவ்வாறு சட்டத்துக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

`பேட்டி பச்சாவோ... பேட்டி படாவோ’!

பாலியல் பாகுபாட்டை களைவது, குழந்தைத் தொழிலாளர்களின் நலன் போன்றவற்றுக்காகப் போராடும் புதுச்சேரி `ஹோப்' நிறுவன இயக்குநர் பெ.ஜோசப் விக்டர் ராஜி, “பாலியல் பாகுபாடு, வரதட்சணை, பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற சமூகப் பிரச்னைகளே, பெண் குழந்தைகளைப் பாரமாக நினைப்பதன் முக்கியக் காரணங்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பெண் பாலின விகிதம் குறைவாக உள்ளது. இந்தச் சூழலை மாற்றும் விதமாகத்தான் மத்திய அரசு,  கடந்த ஆண்டு ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’ என்ற திட்டத்தை அறிவித்தது. பெண் குழந்தைகளைக் காக்கவும்,கல்வி அறிவு புகட்டவும் வகை செய்யும்  இந்தத்  திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியே! இதுகுறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்’’ என்றார்.

ஏட்டளவில் இருக்கும் ‘ஆணுக்குப் பெண் சமம்’ கொள்கை, என்று நிறைவேறுமோ?!

எஸ்.மகேஷ்

பெண் குழந்தைகள் தினம்!

மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக ஜனவரி 24-ம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து, ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது மத்திய அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism