Published:Updated:

ஜீயர்மீது வழக்குப்பதிவு செய்யலாம்..! உயர் நீதிமன்றம் உத்தரவு

கார்த்திக் துரைமகாராஜன்.சி
ஜீயர்மீது வழக்குப்பதிவு செய்யலாம்..! உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜீயர்மீது வழக்குப்பதிவு செய்யலாம்..! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜீயர்மீது வழக்குப்பதிவு செய்யலாம்..! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது, ஜனவரி 26-ம் தேதியன்று `எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும்' என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இந்த விவாகரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஜீயருக்கு எதிராக வைரவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர், `ஜீயர் பேசியது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று விளக்கம் அளித்தார். அதைக்கேட்ட நீதிபதிகள், 'ஜீயர் பேசியதில் வழக்கு தொடரும் முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்கு தொடரலாம்' என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.