Published:Updated:

சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் - 2 பேர் மீது வழக்கு!

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் என்ற கிராமத்தில் வேறு சாதி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஊர்க்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் இரண்டு பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது புன்னக்காயல். இக்கிராமத்தில் கிறிஸ்துவ மீனவ சமுதாய மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊர்க் கூட்டத்தில், "வேற்று சாதி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்" என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஊர் முழுவதும் மைக்கில் அறிவிப்பாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அதில், காதல் திருமணம் செய்த 14 பேரின் பெயரைச் சொல்லி, "கடந்த 15 வருடத்தில் வேறு சாதி ஆண்களை மணம் முடித்தவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு வழிதவறிப் போனவர்களுக்கு நமது ஊரில் இடமும் கிடையாது. நன்மையும் தீமையும் கிடையாது. ஊர்க்கூட்டத்தின் இத்தீர்மானத்தை மீறி ஊருக்குள் அவர்கள் வந்தாலோ, அல்லது அவர்களுக்கு யாராவது ஆதரவு அளித்தாலோ, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் நமது ஊர் பெண்களை நல்வழிப்படுத்தவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறப்பட்டவர்கள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் ஊர்மக்களே அவர்களது வீட்டுக்குப் பூட்டு போடுவார்கள்" என அறிவிக்கப்பட்டது. 

ஊர் கமிட்டியின் இத்தீர்மானம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த வழக்கில் இரண்டு பேரை போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். புன்னக்காயலைச் சேர்ந்த லெபர்ஷா - மணி என்பவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறி எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஊர் கமிட்டி தலைவர் செல்வராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர் கெல்டின் ஆகியோர் மீது அடிப்படை குடியுரிமை மறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற (506 (i) i.p.c 7(B)) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!