Published:Updated:

“துப்புரவுப் பணியாளர்கள் எப்படிப் புகார் சொல்லலாம்?”- உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

பிரதீப்.த.ரே
“துப்புரவுப் பணியாளர்கள் எப்படிப் புகார் சொல்லலாம்?”- உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
“துப்புரவுப் பணியாளர்கள் எப்படிப் புகார் சொல்லலாம்?”- உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

துப்புரவுப் பணியாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

“துப்புரவுப் பணியாளர்கள் எப்படிப் புகார் சொல்லலாம்?”- உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றுபவர் மகாலட்சுமி. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை தாளாளர் சித்ராதேவி வீட்டு வேலைகள் செய்யக் கட்டாயப்படுத்துவதாகக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, அந்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, 4 வாரங்களுக்குள் சித்ராதேவிக்கு மகாலட்சுமி ரூ.25,000 ரூபாய் வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார். 

நீதிபதி கூறும்போது, “மனுதாரர் தினக்கூலி அடிப்படையில் துப்புரவுப் பணி செய்கிறார் என்றால், அவர் பணிபுரியும் வளாகம், அங்கிருக்கும் கழிவறை ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்பதும் துணிகளைத் துவைத்துப் போட வேண்டும் என்பதும் அவருடைய இயல்பான வேலை என்பதே என் கருத்து. இதிலிருந்து மனுதாரர் மட்டும் எப்படி விலக்குப் பெற முடியும். 

பொதுவாக வீட்டு வேலைக்காகப் பணியமர்த்தப்படுகிறவர்கள், அந்த வீட்டின் கழிவறைகளைச் சுத்தம் செய்வதோடு, அந்த வீட்டு உறுப்பினர்களின் துணிகள்-உள்ளாடைகளைக்கூட துவைத்துப் போடுவதே அவர்களின் பணி. ஏனெனில், அதற்காகத்தான் அவர் பணியமர்த்தப்படுகிறார். 'நான் கழிவறையைச் சுத்தம் செய்ய முடியாது' என்று ஒருவர் சொல்வாரென்றால், அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் ஒரே சாதிப்பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆக, சாதிய ரீதியான இழிவுபடுத்துதல் நிகழ்ந்தது என்றும் கருத முடியாது. மேலும், காவல் துறை விசாரணை அறிக்கையைப் பார்க்கையில், மனுதாரர் தரப்பில்தான் பிழையிருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறினார்.