Published:Updated:

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை கைதுசெய்ய தடை!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை கைதுசெய்ய தடை!
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை கைதுசெய்ய தடை!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை கைதுசெய்ய தடை!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைதுசெய்ய இடைக்காலத் தடை விதித்து, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்தவர், தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல் என்ற செல்போன் சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார். ஏர்செல் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியது. மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூபாய் 3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, 2006-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரை அடுத்து, கடந்த வருடம் ப.சிதம்பரத்தின் அலுவலகங்கள் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தியது பரபரப்பாகப் பேசப்பட்டது. 

இதற்கிடையே  ஜூன் 5-ம் தேதி, சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென ப.சிதம்பரத்திற்குச் சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனைத் தொடர்ந்து, ஆஜராகும்போது கைதுசெய்யப்படலாம் என்ற தகவல் பரவியதை அடுத்து, முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவை நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று விசாரணை செய்தார். அப்போது,  ஜூன் 5 தேதி வரை ப.சிதம்பரத்தைக் கைதுசெய்ய  இடைக்காலத் தடை விதித்ததுடன், அமலாக்கத்துறை பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு